பக்கம்:உயிரில் கலந்தது.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


ஐயோ! என் இல்லற வாழ்க்கையிலும் இலக். கிய வாழ்க்கையிலும் நான்கண்ட கனவுகளை யெல் லாம் தவிடுபொடியாக்கி விட்டாயே நீ?

நீ தான் விதியா? இல்லை, நீ தான் தெய்வமா? நீ என் உடைமையாகக் கனவு கண்டு கொண் டிருப்பாய்! பாவம்:

என்னை மன்னித்துவிடு! பாவம், வாணி!

ஞானசீலன், உறையை உதறினுள் தவசீலி. மற்குெரு துண்டுக் கடிதம் விழுந்தது. வாணியை, நாடியது. 罗

“அன்பிற்குரிய வாணி

நீ என் தெய்வம். இந்தக் கலியுகத்திலே தெய் வத்தை நான் கண்முன் கண்டு கொண்டேனே, அதற்கு நான் பூர்வஜென்மத்தில் தவம் இயற்றி யிருக்கத்தான் வேண்டும். உன்னை அ ழி த் து க் கொண்டு, உன் தோழியை வாழவைக்கத் துணிந்த தியாகசீலி நீ; நன்றிக்குக் கிட்டிய இலக்கணம் நீ!

உன்னைப் புகழ அருகதை அற்ற பாவி நான்! கோழை தான்!

இப்பிறப்பில் உன்னை என் உயிரின் மறுபாதியாக அடையக் கனவு கண்டேன். முடியவில்லை. அடுத்த. பிறப்பிலேனும் உன்னை அடையத் தவம் செய்வேன். அதற்காகவேதான், இப்பூவுலகிலிருந்து சற்றைக் குள்ளே விடைபெறப் போகிறேன்.

என் திருமணம், ஆம்; நம் திருமணம் பூலோகத். தில் நிச்சயிக்கப்பட்டது. ஆனல் என் திருமணம்ஆம்; நம் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட வேண்டுமென்பதுதான் தெய்வத்தின் திருவுள்ளம். போலும்! -