பக்கம்:உயிரில் கலந்தது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T.23

அடுத்த பிறவியில் என் கனவுகள்-ஆம்; நம் கனவுகள் ஈடேறுவது நிச்சயம் ஆண்டவன் நல்லவன்! எனக்கு விடைகொடு, வாணி மறந்துவிடாதே! என் அன்னையின் உயிருக்கு நீதான் காவல் இருக்க வேண்டும்! -

ஞானசீலன்.” தீபத்தட்டில் எரிந்து, பின் அணைவதற்குத் துடிக்குமே சூடன், அது போன்று வாணி துடித்தாள். துவண்டாள்; கண்ணிரைத் துடைத்துக் கொண்ட பிறகு, தவசீலியையும் ஞானசீலனையும் கரம்பற்றினுள்; ஞானசீலனின் வலதுகை யுடன் தவசீலியின் இடதுகையைப் பிணைத்துச் சேர்த்தாள். ஆனந்தமாக வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கிளுள் வாணி

மிதந்த காற்றில் அலைந்தாடிய தாள்காட்டியைப் பார்த்த வாறு, நாணம் பூத்து-நகைபூத்து நின்றாள் தவசீலி. கையை விடுவித்துக் கொண்டு, ஞானசீலனின் செவிகளில் ரகசிய மொன்றை ஒதினுள். பின்னர், மகிழ்ச்சி ரதமேறி வாணியின் பக்கம் போய் இறங்கினள். அவள் காதுகளிலும் அந்தரங்கம் பேசிளுள். அவளது கன்னங்களேத் தட்டிக் கொண்டே அவளுடைய சம்மதத்தைப் பெற்றாள் கவசீவி! இப்போதா வது என்ன இதய பூர்வமான பாசத்துடன் ஏற்பீர்களல்லவா அத்தான்?’ என்று கண் கலங்கிக் கேட்டாள் அவள்.

“நீ உன்னுடைய முதல் கடிதத்தை எனக்குக் காரியாலயத் துக்கு எழுதினயல்லவா? அப்போது அதைப் படிக்கப் படிக்க என்னுள், என்னேயுமறியாமல் ஊறிக்கொண்டிருந்த இனம் விளங்காத குது.ாகலத்தின் உட்பொருள் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது’ என்று ஆனந்தத்தின் னஞ்சலை ஆட் டிக்கொண்டே, அவளது இமை துணிகளைத் துடைத்தார் ஞானசீலன்! - -