பக்கம்:உயிரில் கலந்தது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

சாம்பல் தட்டில் இடம் இல்லை! நெஞ்சில் இடம் இருந்த எண்ணங்களைப் போட்டுக் குழப்பிக் கொண்டார். அறையினின்றும் வெளியே வந்தார். .டவல் தோளில் தவழ்ந்தது: நெஞ்சில் தவழ்ந்தாள் கதைத் தலைவி. நினைவில் தவழ்ந்த அந்தப் புத்தம் புதிய முகத்தைச் சுட்டினுள். சுட்டும் விழிச் சுடரில் ஒளி காட்டி, ஒளி தேக்கும்

சீலம் அவர் நேத்திரங்களில் ஓடியது.

வேலைக்காரர்கள் ஷேக்கும் மணியும் சாப்பாட்டு விவரம் கேட்க வந்து, விடை கண்டு, திரும்பிஞர்கள். சிரிக்க வைக்கும் தோற்றத்துடன் ஒவியர் ஒருவர் வந்தார். “நான் தான் ஸார் மீனம்: ஜோக் போட்டிருக்கேன்!” என்று படங்களைப் பிரித் தார். சிரிப்பு ஏதும் பிரியாததால், பிரிய வேண்டியவர் ஆஞர்.

மணி ஏழு-எழுபது. -

தம்புச் செட்டித் தெருவின் சுறுசுறுப்பு ஒயவில்லை.

இந்திரகுமார் என்ற இ ளை ஞ ர் வந்தார். இழைந்த வேண்டுகோளின் பிரகாரம், சிதம்பரம் ஜெயராமனின் குரலை :பாவனை செய்து பாடிக் காட்டினர். நெடுமாறன், பரமசிவம் போன்றாேர் வந்தார்கள். இலக்கிய உலகம் தன்போக்கில்-தன் லயத்துடன் சுழலத் தொடங்கிற்று.

ஞானசீலனுக்குத் திடுதிப்பென்று அம்மாவின் ஞாபகம் வந்தது. ஒரு வாரமாக வந்து கிடந்த தபாலுக்கு காலையில் பதில் அனுப்பியதை நினைத்தார். “நான் பதில் போடுவதற்கு ஒரு நாள் தாமதமானல்கூட அவர்கள் அன்னம் தண்ணீர் விரும்ப மாட்டார்களே! அன்னை எனும் கடவுள் கொள்கை யில் அவர் நீந்தினர். நீரின் அல்ைகளுடன் நெஞ்சின் அலைகள் போட்டியிட்டன.

ஒரு சமயம், ஞானசீலனின் தாய்க்கு உடல் நலம் நலிந்தது. அப்போது அவர் அன்னைக்கு அருகிலேயே இருந்த நேரம். “தம்பி உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்க்கும் பாக்கி