18
அந்த வீட்டின் தவைாசலில் வலதுகாலை வைத்து நடந்தார் ஞானசீலன். -
ஞாயிறு போற்றுவோம்!
முன்னைப் பழவினையின் பின்னப் பழங்கதைக்கு வாய்த்த புதுப் பொருளாம் அன்னை வடிவம் சமைத்துக் கொடுத்த பாசத்தின் தலைவாயில், தன் அ ைட யா நெடுங்கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, ‘வா, மகனே, வா!’ என்று முகமன் கூறி நிற்பது போன்றதொரு பிரமை அவருள் எழுந்து, பரவி, நிலைத்து விட்டிருந்தது. உள்ளத்து உணர்வுகள் விழிப்புக் கொடுத்துக் கிடக்கையில், மனத்திற்குக் கற்பன சக்தி கூடுதல். அது சமயம் இந்த மனம் எதையும் எண்ணும்: எண்ணுமலும் இருக்கும். இப்படிப்பட்ட இரண்டுங்கெட்டஇரண்டும் கூடிய நிலைதான் பிரமை, இத்தகையதொரு கட்டத்தில் இதயத்தைப் பழக்கிவிட்டவர் அவர். காரணம், அவர் ஒர் எழுத்தாளர். அதாவது, எழுத்தை ஆளுபவர். எழுத்தை ஆளுபவருக்கு மனத்தை ஆளத் தெரியத்தான் வேண்டும். என்றாலும், இந்த மனம் இருக்கிறதே, இது சமய சந்தர்ப்பங்களிலே எல்லோரையும் சோதித்துத்தான் தீரும்!
மனம் தத்துவம் படித்தது! பாசத்திற்குத் தத்துவமா பெரிது ? ஊஹூம்! பாசத்துக்குப் பாசம்தான் பெரிது!
அம்மா!,..அம்மா! என்ற நாமாவளி வளர்ந்த பாடல் பெற்ற கோயிலின் ஸ்தல விருட்சம் போன்ற ஓர் உருவம் தெரிந்தது. -
ஞானசீலனுக்கு மெய் சிவிர்த்தது. விழி யுணர்வு சிலர்த்தது. ‘அம்மா’ என்று ஓடிப்போய் விழுந்தார். கரங் களில் போட்டுத் தாலாட்டிய மகன பாதங்களில் கிடத்தவா அவள் சம்மதிப்பாள்? கோச ைஅம்மாள் விதரண புரிந்தவள் இல்லையா? . . . . . . . .