பக்கம்:உயிரில் கலந்தது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


நகையுமாகக் காட்சி தந்தாள். பெரியவர் கோதண்டபாணி யின் மகள் வாணி. நம்மால் இந்தப் பெண்ணுக்கு வீண் சிரமம். தொண்டுதான் மனித மனங்களிலே அன்பையும். பாசத்தையும் வளரச் செய்கின்றது.”

“இட்லி ஆறிடப் போகுது. அம்மா சாப்பிடச் சொன்னங்க.”

“ஆமாம், ஞானசீலன். சாப்பிடுங்கள். எனக்கும் பசி, தாளலே,” என்று பேச்சைத் துண்டித்தார் கோதண்டபாணி. இட்டிலித் துண்டங்களைத் தூண்டில் போட்டார்.

‘ஆகட்டும். இதோ, சாப்பிடுகிறேன். இட்டிலி சாப்பிடு வதற்கு அம்மாதான் நினைவூட்ட வேண்டுமென்பதில்லை. நீங்களே ஞாபகப்படுத்தினுல்கூட, நான் அதன் பிரகாரம். நடக்க வேண்டியவன்தானே?”

ஞானசீலன் பொடிபோடாமலே, பொடி வைத்து எழுதப் பழகியவர் என்பது ஜகப்பிரசித்தம்- அதேபோல, பேசும் பாங்கும் கைவரப் பெற்றவர்-அதாவது, பேசும் வக்கணை வாய்வரப் பெற்றவர் சார்பிட்டுப் பேசியவளின் திசைபார்த். துப் பேசினர் சிந்தனையாளர்.

வாணியின் அழகுக் கவர்ச்சியில் பங்குபோடும் உரிமை பூண்டவற்றில் ஆணிமுத்துப் பற்களுக்குத்தான் கூடுதலான சொந்தம்-பாத்தியதை. அவை இப்போது முன்னேக் காட்டிலும் ஒளிமிகுந்து திகழ்ந்தன. இதழ்களின் எழில் திறட்சி விழிகளின் கரையில் ஒதுக்கியது. சரிந்து விழுந்த தாவணியை ஒதுக்கிவிட்டபடி, ஒதுங்கி நின்றாள்.

இட்டிலிகளைத் தாங்கிய எவர்சில்வர் தட்டு காலியானது.

இட்டிவிகளைத் தாங்கிய சாண்வயிறு நிரம்பியது.

‘தம்பிக்கு இது: ஐயாவுக்கு இது’ என்று பிரிவினைபடுத். திக் காட்டியபடி இரண்டு கோப்பைகள் நிறைய காப்பின் கொணர்ந்தாள் முதியவள். - w