பக்கம்:உயிரில் கலந்தது.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


ஞானசீலனுக்கு ஏப்பம் பறிந்தது.

‘தம்பி, உனக்கு எங்கையினலே இப்பிடிக் காப்பி தடு வேன்னு நேத்து சாத்திரி நான் நினைக்கவேயில்லையப்பா’ என்றாள் கோசலை. பின்னர் மீண்டும் தொடர்ந்தாள்: “ஐயா இருக்கிறப்பவே சொல்லிப்பிடுறேன். அவங்களுக்கும் அத்து படியான சேதிதான் இது. தம்பி, நான் இன்னம் ரொம்ப நாளைக்கு இந்த மண்ணுக்குப் பாரமா இருக்கப்போறதில்லே. என்னுேட ஆவி நிம்மதியாப் பிரியவேணும்னு உனக்குத் துளியத்தனை யாச்சும் கவலை இருந்தாக்க, நான் உசிரோட இருக்கிறப்பவே, உன்னை மாலையும் கழுத்துமாப் பாக்கிற பாக்கியத்தை எனக்குத் தந்துப்பிடு, போன வருஷம் எனக்கு உடம்புக்கு வந்திச்சு; உயிர் தப்பிச்சுது; ஆளுல். இப்ப அப்படி இல்லே; இருக்கவும் வாய்க்காது. எம்மனசிலே இருந்த பேருங்களையெல்லாம் போன வருஷமே உனக்கு நான் சொல் லிப்பிட்டேன். இந்தப்பன்னிரெண்டு மாசத்துக்குள்ளே புதுசா ஒரு பேரையும் உன் கவனத்துக்குக் கொண்டு வரவேணும்.” என்று நறுக்குத்தறித்த மாதிரி பேச்சைத் தொடங்கி நிறுத்திய கோசலை அம்மாள், ஓர் அரைக்கணப் பொழுது கழித்ததும், ‘அம்மாடி வாணி!” என்று கூப்பிட்டாள். வாணியின் முகம் கண்டதும், ‘ஒரு லோட்டா தண்ணிர் வேணும். சுடு தண்ணி, தம்பி, ஒனக்குப் பச்சைத் தண்ணி கொண்டாரச் சொல் லட்டுமா?...வாணிதான் தன்னுரிவேர் போட்டு பதப்படுத்தி வைச்சிருக்குது,” என்று நாசூக்காகப் பேச்சை எங்கெல்லாமோ கொண்டு சென்றாள் தாயார், -

தண்ணீர் வந்தது.

ஒரு மடக்கு தீர்ந்தது.

பஸ் ஸ்டாண்டு-மானுங்கோரை டவுன் பஸ் காதைத் துளைத்துக்கொண்டு சென்றது. .

“அந்த ஒரு பெயரைச் சொல்லிப்பிடட்டுமா?*

  • 2s Tuff” 2–270