பக்கம்:உயிரில் கலந்தது.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


“வாணிங்கிற இந்தப் தேர்தான் புதுசு, என்னமோ தம்பி உன்னே மாலையும் கழுத்துமாப் பார்க்கிறதுக்குக் கொடுத்து அச்சவளாக ஆக்கிப்பிடு, போதும்.” என்று மீண்டும் ஒரு முறை நினைவூட்டினுள் அவள். வாழ்வின் கதையை முடித்துக் கொள்ளப் போகிருேமே என்கிற வேதனையின் நச்சரிப்பு தச்சரவமாகக் கொத்திக் கொண்டிருந்தது.

நிலைப்படி மறைவில் நின்ற வாணி ஒரக்கண்ணுல் கூடத் துக்கு தன் கள்ள விழிப் பார்வையைத் திசை திருப்பினமாதிரி, ஞானசீலனுடைய நேர்முகப் பார்வையும் அந்த அழகுப் பதுமையைச் சுற்றி வளைத்துக்கொண்டு ஒரு வெள்ளைக்கோடு கிழித்தது. சம்பூர்ண ராமாயணத்திலே வருகிற இட்சுமணன் கோடல்லவே அது?...

ஞானசீலனின் விமிகள் மயங்கின. வாணியின் கண்கள் அவ்வாறு மயங்க வைத்தன என்பது எண்பது சதவிகிதம் உண்மை தான். அத்துடன் இன்னொரு அசல் காரணமும் ஒளிந்திருந்தது. அது இதுவே: வாணி பூமாலையும் கையுமாகக் காட்சி தந்தாள்.

கான லேனின் கற்பனைக் குதிரை கால்கள் பின்னவிட விழிபிதுங்கி நின்றது. எதற்கு அந்தப் பூமாலை?

g ಘಿಥಿ வாரேன்,” என்று சொல்வி உள்ளே

சனருள கோசலை.

கோதண்டபாணி எழுத்து வெளிப்பகுதிக்கு விரைந்தார். ஞானசீலன் துணிவு கொண்ட இயல்பினர்தான். ‘வாணி,’ என்று முதல் முறையாகப் பேர் சொல்லி ஒரு பெண்ணே-முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வாலைக்குமரியை அழைத்தார். .

வாணி வந்தாள். வந்தவள், தன் கையிலுள்ள மாலையை அவர் கழுத்தில் போட்டுவிட்டுத்தான் மீறுவேஜ ப; பாளோ என்று சந்தேகப்படுத் படியாக, அவ்வளவு விளக்க pாக மாலையை ஏந்தியிருந்தாள் அவள். “கூப்பிட்டீங்களா?