பக்கம்:உயிரில் கலந்தது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


“மத்தியானம் சாப்பிட்டுப் போறதுக்குள்ளே ஒரு முடிவு செஞ்சுக்கிடலாம்,’ என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு, மாடிக்கு விரைந்தார் ஞானசீலன், பட்டணத்தில் இருக்கும் பொழுது, வந்த அந்தக் கதாசிரியையின் கடிதத்தை எடுத்து வைத்து மறுமுறையும் படிக்கத் துடித்தார். அதே சடுதியில், வாணி கொடுத்த முகவரியில்லாத கடிதத்தையும் திரும்பப் படிக்க வேண்டும் போல உணரலாஞர். .

இதற்கு ஊடே, ஞானசீலனைத் தேடிக்கொண்டு இலக்கிய ரசிகர்கள் கூட்டமொன்று முட்டியடித்துக்கொண்டு வந்து விட்டது. எல்லோருக்கும் காப்பி விநியோகம் அமர்க்களப் பட்டது. இலக்கிய சர்ச்சை காரசாரமாக நடந்தது.

முப்பது நிமிஷங்களை உண்ட மயக்கத்தில் காலம் எனும் தெய்வம் ஊமை நடை பயின்றது! -

அடுத்த முப்பத்தைந்தாவது நிமிஷம் அங்கே ஒர் அதிசயம் பாய்விரித்து, அவரைக் குந்தச் செய்தது. புதிய பெண் ஒருத்தி வந்து, “என் பேர் தவசீலி; நீங்கள்தான் ஞானசீலன். “தமிழரசி பத்திரிகையின் உதவி ஆசிரியரென்று கருதுகிறேன் வணக்கம்,’ என்று கைகூப்பி நின்றாள்: .

5. பெண்மையின் கண்ணிர் அதிf

ஞானசீலனுக்கு ஒரு பழக்கம் உண்டு. கதைகள் எழுது வதற்கு உண்டான மன உத்வேகம் எழுச்சி கொள்ளும் நேரத் தில் அவருடைய பேஞ தன் போக்கில் ஒடிக்கொண்டே இருக் கும். ஒடிக்கொண்டிருக்கும் காலத்தின் கைப்பிடியில் சிக்கா மல், கைப்பிடிப்பில் இழையும் பேணுவின் சுழிப்பில் சிக்கி, சிக்கல் ஏதுமின்றி எழுத்துக்களை உருவாக்கும்பொழுது, அங்கங்கே விழுந்து சிதறியிருக்கும் அழகான சிந்தனை நயங்