பக்கம்:உயிரில் கலந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


“சரி. நான் போய் வருகிறேன்.”

அவள் சொல்லி வாய் மூடவில்லை.

ஆலயமணி ஒலித்தது.

“இருங்கள் : சாப்பிட்டு விட்டுப் போகலாம். ஒரு மணிக்கு திருச்சிக்கு வண்டி இருக்கு!”

“நன்றிங்க ஸார். அங்கே அப்பா என்னைக் காளு மல் தவிச்சுக் கிட்டிருப்பாங்க. வணக்கம். நான் போயிட்டு. வாரேனுங்க,” என்று கைகுவித்து விடைபெற்று வெளியேறப் போன தருணத்தில், ‘உங்களை உங்க அம்மா சாப்பிடக் கூப்பிடுருங்க,” என்று ஒரு பெண் குரல் கேட்கவே, ஞான சீவன் திரும்பி () 行。

வாணி நின்றாள்! -

மாறிமாறி, மாற்றி மாற்றிப் பார்த்துப் பிரிந்த, பாவையர் இருவரையும் கண்வீசிப் பார்த்தார் அவர். சிரிப்பு வெடித்தது!

வெடித்த சிரிப்புடன், தான் அரைகுறையாக விட்டிருந்த காகிதங்களை எடுத்துவைத்துக் கொண்டு பேனவை எடுத்தார். போதை கொண்டவரென, எழுத்துக்களை அள்ளி அள்ளி வீசினர்.

“...அந்தப் பெண் என்ன பதில் ச்ொல்லப் போகிருளோ வென்று காத்திருந்தான் அந்த இளைஞன். அதற்குள் அவளுக்கு டெலிபோன் கால் ஒன்று வரவே, அவசரமாக விரைந்து சென்று பேசிளுள். ஆமாங்க அப்பா! நான் இவரைத்தான் லவ் பண்ணுறேன். என் முடிவு இதுதானுங்க!” என்றாள்!...” :

கதைக்கு நல்ல முடிவு கிட்டிவிட்டதில் ஞானசீலனுக்கும். பரமதிருப்தி கிட்டியது!...