பக்கம்:உயிரில் கலந்தது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ‘நீ என்னைக் காதலிக்கிருயா ?...”

ராஜோபசாரம் நடந்து கொண்டிருந்தது.

ஒற்றைக்காலில் நின்று எல்லாவற்றையும் கவனித்தாள் கோசலை அம்மாள். .

பெரிய மனிதர், அந்நியர் வீட்டில் சாப்பிடுகிருேம் என் பதை அடிக்கொரு முறை நினைவுபடுத்திக் காட்டினர். ஞான சீலன் நல்லபதில் சொல்லிவிட்டால் போதும் என்ற தயவு ணர்ச்சியில் அவர் மனம் தவித்தது.

ஞானசீலன் வெகு உரிமையுடன் அவரைக் கவனித்தார். சர்க்கரைப்பண்டம் அதிகம் புசிக்கக் கூடாதென்று சொல்லி யும கேட்காமல், அவர் இலையில் சேமியா பாயசத்தை எவர்

ஸில்வர் கரண்டியால் ஊற்றச் செய்தார்.

வாணிக்கு வேர்வை கொட்டியது.

சாப்பாடு முடிந்ததும், வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து வைத்துச் சென்றாள் வாணி. இந்தப் பெண்ணை ஜாடை மாடையாகப் பார்த்த விருந்தினர், “ஆமா, இது யாரு?” என்று கேட்க, “எங்களுக்கு வேண்டப்பட்டவுங்க,” என்ற பதிலை வீட்டுத் தலைவியிடமிருந்து வாங்கிக் கொண்டு, ஞான இலனின் முகத்தையே ஒரக்கண்ணுல் நோக்கியவராக விற்றிருந்தார். - -

ஞானசீலனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவருக்கு தன்னுடைய வேர்வை நெற்றியைத் துடைப்பதற்கே சரியாக இருந்தது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல, இருக்கையைப் பிரிந்து எழுந்து, கூடத்திற்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்தாள் அவர் தாய். அவளிடம் அவர் சொன்னர்: “அம்மா, எனக்குத் திடுதிப்பின்னு எந்த ஒரு முடி