பக்கம்:உயிரில் கலந்தது.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


சொந்தக் காரியமாகப் பேச விரும்புகிறார். ஆகவே, உடனே புறப்பட்டு வாருங்கள் என்று நிர்வாகி எழுதியிருந்தார் “என்ன சொந்தக் காரியம் அது?...ஸஸ்பென்சுகள் ஒன்றன் பின்னென்றாகக் காத்திருந்து என்னை மோதுகின்றனவே? ஆமாம், இந்தப் பெண் வாணிக்கு என்ன பதில் எழுது, வதாம்?...” - i

ரேடியோப் பெட்டி ‘தேவமஞேஹரி ராகத்தை இசைத் துக்கொண்டிருந்தது.

சூழலை மறந்து, சங்கீதப் பித்தாளுர் அவர்!... ஞானசீலன், தன் அருகிலேயே நின்று கொண்டிருந்த வாணியைப்பற்றிய நினைவே இல்லாமல், சிகரெட் ஒன்றை. எடுத்துப் பற்றவைத்தார். பதட்டத்துடன் புகை கக்கினர்; புகைச்சல் இருமலை வெளியிட்டார். பின்னர், எழுதி முடித்த கடிதத்தை எடுத்து அவள் வசம் சேர்ப்பித்தார்.

வாணி அந்தக் காகிதத்தை வாங்கி உரத்த இதானியில் படித்தாள், “என்னை நீ காதலிக்கிருயா?” என்று. ’ - “வாணி, இது என் கேள்வி. ஆகவே, பதில் சொல்ல. வேண்டிய பொறுப்பு உன்னுடையது’ என்று வாய்விட்டுச் சிரித்தார் ஞானசீலன். -

விடை மொழிய, அப்பொழுது அங்கே வாணி பொட்டுப் பொழுதேனும் நின்றால்தானே?

“நல்ல பெண்!...ஊம்!...”

7. ‘நெஞ்சே நீ, வா !”

டிசம்பர் பூவிற்கு ஒரு மகத்துவம் உண்டு. அது கண்ணில் பட்டுவிட்டால், பிறகு. அவரது கருத்தைவிட்டு அகலமாட் டாது, அப்பூவைப் போல அந்தப் பூவை நின்றாள்; நிலத் தாள். அவள் பெயர், வாணி!