பக்கம்:உயிரில் கலந்தது.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


மைேரஞ்சிதப் பூவுக்கு ஒரு மகிமை உண்டு. நெஞ்சைத் தொடும் வகைவகையான மணம் தரும் மணம் அதற்கு வாய்த்திட்ட நற்பேறு ஆகும். அந்தப் பூவை நிகர்த்திருந்தாள் இந்தப் பூவை. இவள் பெயரும் வாணிதான்! - வாணியைப் பற்றிய நினைவுகள், நீண்டு விரிந்த செந் தாழைமடல் குருத்துப் பூக்களாக ஞானசீலன் மனத்தில் சிதறின; நறுமணத்தைச் சிதறின.

கமலப் பூவின் புற இதழ் மருங்குச் சிவப்பினை நினைவூட்டும் வண்ணம் வண்ணம் கொண்டிலங்கிக் கொண்டிருந்தது அந்திவானம். -

ஞானசீலன் கண்களை மூடிமூடித் திறந்தார். ஆசைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன. வாணியின் நினைவும் நினைவு முகமும் அவரை ஆட்டிப் படைத்தனவா? படைப்பின் சக்தியையே அவ்வாறு அலைக் கழித்தனவா? -

வாணியை எண்ணமிட்டார் அவர். மனமேடையில், தலைப்பாகை திகழ, மணவறையில் குந்தி யிருக்கப்போகின்ற காட்சி விரிந்தது! - எண்ணங்கள் அழுத்தம் பெற்ற தருணத்தில், நெஞ்சில் அழுந்திய பாவையென நினைவில் அழுந்தி நின்றாள் வாணி,

சிரித்த முகம். சிரிக்க வைக்கும் முகம் அது. கனவு காட்டும் கண்கள். கனவுகளைக் காட்டச் செய்யும் கண்கள் அவை. சிந்துரச் சிவப்பு உதடுகள். - - மந்தாரைப் பூவின் மயல் கொண்டவை அவை. ‘ஸார், நான் நேற்று தந்துவிட்டுப்போன லெட்டருக் குப் பதில் தயாரிச்சுப்பிட்டீங்களா!-வாணியின் முகவிலாசத்

3-370 . . . .” -