பக்கம்:உயிரில் கலந்தது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 i

கோசலை அம்மாளின் முகத்தில் ஆனந்தப் பெருக்கு ஆடிப் புனலாகப் பொங்கி வழியத் தலைப்பட்டது.

அன்றிரவு ஞானசீலன் போட்மெயிலில் பட்டணத் திற்குப் பயணப்பட்டார். அன்றிரவு பூராவும் அவர் மனம் “வாணியையே நினைத்து மகிழ்ந்தது. ‘நெஞ்சே! நீ வா “ என்று அவள் தவம் புரிந்த அதே திசை நோக்கித் தவம் இருந்தது !

8. ஞானசீலனின் பாதங்களில் தவசீலி !

‘தவம் என்றால், அதற்குக் கட்டுத் திட்டங்கள் அதிகம். கண்மூடி, வாய் பொத்தி, ஒன்றிய தனிமையில் ஒன்றினல் மாத்திரம் போதுமா? போதாது, போதாது !

கண் மூடியிருக்க, மனம் திறந்திருக்க வேண்டும்.

  • மனம் திறந்திருக்க, மனிதாபிமானம் உணர்ச்சி பூர்வ மான பிடிப்புக் கொண்டு விழித்திருக்க வேண்டும்.

மனிதாபிமானம் விழித்திருக்க, சாடும் தொல்லைகளைச் சாடி ஒட்டும் துணிவுமிக்க அகங்காரம் துடிப்புப் பெற்றிருக்க வேண்டும்.

எல்லாம் இருந்துவிட்டதால் மட்டும், தவம் தகுதி கண்டு விடுமா? இல்லை, தகுதியைத்தான் காட்டிவிடுமா?

ஒருகாலும் இல்லை. *

மனிதாபிமானம், உணர்வு, விழிப்பு, துணிவு போன்ற எல்லாவிதமான துணைச் சக்திகள் மட்டும் இருந்து பிரயோ சனம் கிடையாது. மனித மனத்தில் அகப்பட்டுக்கொண்டு விழிக்கும் அந்த ஹிருதயத்திற்கு ஈவு, இரக்கம், கருணை,