பக்கம்:உயிரில் கலந்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీసా

வாறு, நாணம் குமிழ் பறித்த பாவனையுடன், காஞ்சிப் பட்டுச் சேலை முகதைைவ இழுத்துப் போர்த்திக்கொண்டு, மஞ்சள் தாலியைமட்டும் தங்கக் கழுத்தில் பொற்புக் காட்டித் தவழ, விட்ட வண்ணம், துரங்காமால் துரங்கிக் கொண்டிருந்தாள். அவளது கோழித் தூக்கத்தைக் கொத்திப் பதம் பார்த்து ரசிக்கும் சேவலாக மாறிய அவள் கணவன், பரம ரசிகளுக மாறி விட்ட பெருமை பிடிபடாமல், பிடியெனக் காணப் பட்ட அவள் எழிலே மாந்தித் திளைத்துக் கொண்டேயிருந் தான். ‘உன்னை எனக்கு அர்ப்பணம் செய்தாய் நீ; ஆகவே, என் உறக்கத்தை நீ எடுத்துக்கொள். வாழ்வின் பரிவர்த்தனை இப்படியாக நம்முள் மலரட்டும்; மனக்கட்டும், என்று சொல் லாமல் சொல்லிக் கொண்டிருந்திருக்கவேண்டும்!

மறு பகுதிக்குத் திரும்பிஞர். எழுபதைத் தாண்டிய அயர்வில் களைத்துச் சளைத் துக்கிடந்த கிழத்தம்பதி இருவர்; அவர் தலை அவள் மடியில் கிடந்தது. லொக் லொக்’ என்ற இருமல் தாலாட்டுப் பாடியது. இல்லாவிட்டால், பெரியவருக்குத் தூக்கம் பிடிக்குமோ? . .

வேறு கோணத்திலே, கிராமப்புறத்துக் காதலர்கள் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, தொட்டுத் தொட்டுப் பேசிப் பேசி, சிரித்துச் சிரித்துக் காலத்தையும் தூரத்தையும் கடந்து கொண்டிருந்தார்கள். -- *

சிரிப்புத் தோன்றும்வரை, வாழ்க்கையும் ஆனந்தமான பொழுதுபோக்காத்தானே தோன்றும்! -

விடி வெள்ளி முளைத்தது. - - செங்கற்பட்டு அவருக்கு ஒரு கப்காப்பி சந்தது. காப்பிச் சுவையின் இனிய நைப்புணர்ச்சியை எண்ணிப் பார்த்தவராக, அவர் சிகரெட்டுப் புகையின் தடத்தில், ரெயில் எஞ்சின் புகையை இரண்டறக் கலந்து விட்டுக்கொண்டே, வழிமடங்கி, தான் அமர்ந்திருந்த பெட்டியை நாடிய நேரத்தில் ‘ஆசிரியச்