பக்கம்:உயிரில் கலந்தது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


\ லார்’ என்னும் விளிப்புக் கேட்கவே, சிகரெட்டை உள்ளங் கையில் மறைத்துத் திரும்ப, அங்கே, தவசீலி நிற்கக் கண்டார்.

“வணக்கம், வணக்கம்!” என்று சொல்லி, தரையில் பாதிப் பார்வையையும், தரைமீது நின்ற தவப்பெண்ணைப் பாதிப் பார்வையுமாகப் பார்த்தார்.

“அப்பாவுக்கு ரொம்பவும் முடியவில்லை, பட்டினத்திற்கு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன், gyfrfff”

ரெயில் ஊதியது.

ஊதிய துயரத்தை ஊதி அணைக்க முடியாத நிலையில், “அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டிணத்தில் அவசியம் என்னை வந்து பாருங்கள்,” என்று கேட்டுக்கொண்டு, சிகரெட்டுத் துண்டை வீசிவிட்டு, துண்டினுல் முகத்தைத் துடைத்தவாறு வண்டியைச் சரண் புகலானர் ஞானசீலன்.

பாரதிதாசனுர் நறுக்கு மீசை திகழ, புரட்சிப் பார்வை அடன் காணப்பட்டார்.

‘கவி வாணர்களுக்குக் கூட ஸ்டார் சில சமயங்களிலே மட்டுந்தான் அனுசரணையாக அமைகிறது.’

பாடினர் புரட்சிக்கவி.

சோலையிலோர் நாள் எனயே தொட்டிழுத்து முத்தமிட்டான்: துடுக்குத் தனத்தை என் சொல்வேன்? மாலைப்பொழுதில் இந்த மாயம் புரிந்த செம்பல் வாய்விட்டுச் சிரித்துப்பின் போய்விட்டானேடி தோழி...”

கவிதை இன்பம் மனத்துக்கு விருந்து வைத்தது. முறுவல், இதழ்க் கங்கில் குறுஞ்சிரிப்பைப்பெய்வது இயல்புதானே?