பக்கம்:உயிரில் கலந்தது.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ரிஷிமூலம்-நதிமூலம்!

எழுதி முடித்த தாள்களே ஒன்முக-இஜத்துக்-குன்டுன்

யால் தைத்து, பக்க எண்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து முடித்து, மேஜைமீதிருந்த அழைக்கும் மணியை எழுப்பினர் ஞானசீலன். அந்த வாரத்துக்குரிய தம் கடமை முடிந்தது என்ற அளவில் அவரிடமிருந்து ஆறுதல் பெருமூச்சு புறப் பட்டது, தன் கடமைகள் ஓயாது என்று எடுத்துரைப்பவன் போல, ஆபீஸ் பையன் அறைக்கதவை இழுத்து மூடிக்கொண்டு ஒட்டமாக ஓடிவந்து நின்றான். “அண்ணு’ என்றான்.

ஞானசீலனின் சிந்தன வசப்பட்ட முகம் நிமிர்ந்தது. வாய் திறக்காமல், மேஜைமீதிருந்த கற்றைக் காகிதங்களை

எடுத்து அந்தப் பையனிடம் நீட்டினர். ‘ஆனந்தனிடம்

சொல்லி, இன்றைக்குச் சாயந்திரத்துக்குள் எல்லாம்.கம்போஸ் ஆகி வரவேண்டு மென்று நினைப்பூட்டு, தம்பி” என்று நினைவுக்குச் சிவப்புக்கோடு கிழித்துப் பேசிளுர் அவர்.

“சரிங்க,” என்று தலையை உலுக்கிக்கொண்டே அங்கிருந்து நகரத் தொடங்கினன் சிறுவன்.

“ராதா!” என்று கூப்பிட்டார் ஞானசீலன். “காப்பி வேனுங்களா என்று கேட்டான் ராதா ஞானசீலனுக்குச் சிரிப்பு தாளவில்லை. ஊம்.ஊம். எனக்குக் காப்பி வேணுமிங்கிறதை மட்டும் குறியார்த்து வச்ச மாதிரி கச்சிதமாச் சொல்லிப்பிடுறியே, தம்பி?” என்றாள் அவர். - -