பக்கம்:உயிரில் கலந்தது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{}

அவருக்குத் தன் படிப்பு, ஹாஸ்டல் வாழ்வு, அதன் பயங்கர மான சட்டதிட்டம், ஹாஸ்டல் வார்டன் எர்ரட்டின் கெடு பிடி போன்ற விவரங்கள் அவருடைய மூளையை ஆக்கிரமித் துக்கொண்டன. கட்சியைக் காட்டிலும் பெருமதிப்புக் கொண்ட படிப்புன் மதிப்பு அப்பொழுதுதான் அவருக்குப் புல ஞயிற்று. என்ன பயன்? ஹாஸ்டல் வார்டன், அவருக்கு முன்னதாகவே அவருடைய சட்டத்தைத் தீர்ப்பாக்கி குறிப்பு எழுதி வைத்துவிட்டு, அந்தக் கையோடு, அவரைச் சீட்டு கிழித்து, வெளியே அனுப்பிவிட்டார். ஆகவே, ஞானசீல :னுக்கு இன்னும் அதிகமாக கட்சிப் பைத்தியம் பீடிக்கத் தலைப் பட்டது. முடிவு என்ன தெரியுமா? . .”

“ஒருமுறை பரீட்சையில் தோற்று, பிறகு பட்டம் வாங் கியபின், அவர் பூசனை செய்த தலைவர் ஒருவரைக் காண தஞ் சையிலிருந்து சென்னைக்கு விரைந்தார். தலைவரின் பேட்டிக் காக அவர் வீட்டிலேயே காத்திருந்தார். அவர் சிபாரிசின் பேரில் சென்னையில் ஏதாவது பத்திரிகையில் அலுவல் பார்க்க லாம் என்பதே ஞானசீலனின் சபலம், சபலம் கடைசியில் சபலமாகவே ஆய்விட்டது. நடந்தது இதுதான். மாணவர் சமுதாயத்தின் பொறுப்பு, கடமை ஆகியவைகளைப்பற்றி சாங் கோபாங்கமாகவும், திட்டவட்டமாகவும் பாடம் ஒப்புவித்துப் பழகிய மேற்படி தலைவர், அவரது பக்த கோடிகளில் ஒருவ ரான ஞானசீலனை கடைக்கண் கொண்டு ஏறெடுத்துப் பார்க் கக்கூட அருள்பாலிக்கவில்லை. இப்போது பார்ப்பதற்கு ஒய் வில்லை’ என்ற விடை வந்தது. ஒரு கணம் அவருக்கு மூளை

குழம்பியது. பிறகு, குழம்பிய மூளையில் விடிவு பிறந்தது.

‘உம்மைப் போன்ற தலைவர்களை நம்பி நான் என் எதிர் காலத்தையும் இளமைப் பிராயத்தையும் விளுக்கிக்கொள்ள இருந்தேன். நல்லவேளை, உங்கள் மன எனக்கு ஒரு போதி மரமாக இருந்து, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டது. வாழ்க நீர்! வாழ்க உமது வேஷம் என்று குறிப்பு எழுதி அங்கேயே ஜன்னல் வழியே போட்டுவிட்டு, நடையைக்