பக்கம்:உயிரில் கலந்தது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

கட்டினார், ஆம்பலவாணன் சந்நிதியை அண்டி ஒண்டினார். கேட்டதெல்லாம் தருபவன் அவன் தந்தான். சென்னையிலேயே அலுவல் கிடைத்தது. இலக்கியப்பற்று அவரை வளர்த்தது. கட்சி அரசியலைப் படிப்பதுடன் சரி; பற்றுக் கொள்வதில்லை. ஒரு முறை குட்டுப்பட்டது போதா?....

பல்வேறு தினுசான அரசியல் தலைவர்களின் பெரிதுபடுத் தப்பட்ட படங்களைக் கண்டு, காலத்தை வழி விசாரித்துப் பேசி முடிந்தபிறகு, ஞானசீலன் நெடுமூச்சு விட்டார். நல்ல வேளையாக, அதே நேரத்தில், ‘தமிழரசி’யின் உரிமைக்காரரான மணிமுத்து வேலாயுதத்தின் கார் மட்டும் வரவில்லை, மணிமுத்து வேலாயுதம் அவர்களும், வத்தார். அவர்களுடன் கூட, ஈ‘வினிங் இன் பாரீஸ்’ வாசனைத் திரவியத்தின் நெடியும் நெடிதுயர்ந்து வந்தது.

மூச்சுத் திணறல்.

வணக்கம் செலுத்தப்பட்டது.

“வாருங்கள், மாடிக்கு, விருந்து சாப்பிட்டுவிட்டுப் பேசுவோம்,” என்று மாடிக்கு அழைத்துச் சென்றார்.

இரவின் விழிப்பில் மின்விளக்குகள் விழித்திருந்தன, பூஞ்செடிகள் இளந்தென்றலைத் தாலாட்டின. நீலவானம் நீல வண்ண விளக்கொளியில் முடங்கியது.

விருந்து முடிந்தது.

பெரியவர் சொன்ன சேதி: “ஞானசீலன், எனக்கு ஒன்று விட்ட தமக்கை மகள் ஒருவன் இருக்கிறாள். அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, வாரிசில்லாத என் சொத்துக்களை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது என் விருப்பம், அந்தப் பெண்ணைப் பார்க்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, “புஷ்பவல்லி!” என்றார்.

ஞானசீலனுக்குப் புலன்கள் இயங்க மறுத்தன. வேர்வைக் கொப்புளங்கள் வெடித்தன, நிமிர்ந்து பார்க்கவில்லை.

“ஞானசீலன், பாருங்கள்!