பக்கம்:உயிரில் கலந்தது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


அங்கே வாணி!

ஊருக்குப் புறப்பட்ட தருணத்தில் வாணியிடம் விடை’ சொல்லி, விடை வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டுமென்று ஞானசீலனின் அபிலாலை,

வாணியின் பேசும் விழிகளுடன் பேசித் துடித்த அவரது விழிகள் பூத்துப்போன பின், குடம் ஏந்தி, குவளை மலர்கண் இணையில் மாரன்-சீதனம் தந்த நாணக்குடம் ஏந்தி, அடி பதித்து, அடி பிரித்து விழி நடந்து வந்து சேர்ந்தாள்.

Lifrijo

வாணி!

போய் வருகிறேன்!”

‘ம்...என் நினைவு ஒன்றுடன் இங்கிருந்து புறப்பட்டு, அதே என் நினைவு ஒன்றுடனே அங்கிருந்து புறப்பட்டுவாருங்கள்...!”

எவ்வளவு அழுத்தமான தன்னம்பிக்கை புலவி-பொய்க் கோபம்கொண்ட பாங்கில், குறுந்தொகைத்தலைவிபோல நகை கழித்து, நகைமுகத்தில் சிணக்கீற்று கிறுக்கிப் பேசி-பேசாமல் பேசி வழி அனுப்பி, விழி அனுப்பி வைத்தாளே வாணி,

வாணியை நினைத்த நெஞ்சில் வேறு சில கன்னிப் பெண் களின் முகங்களும் சேர்ந்து சுழன்றன.

மேஜை இழுப்பை இழுத்து ஐந்தாறு கவர்களையும் கடிதத் தாள்களையும் எடுத்து வைத்துக் கொண்டார். சிரிக்கின்ற வரம் வாங்கிக்கொண்டு ‘பிள்ளையார் சுழி இட்டார்.

இரவு மணி இரண்டுக்கு, ஞானசீலன் எழுதிய கடைசிக் கடிதத்தின் கடைசி வாசகம்: -

“...இனி உலகம் எனக்கு எதிரியாகிவிடும். ஆகவே இனி நீதான் எனக்குப் பலம். ஆமாம், வாணி! நீதான் இனி எனக்கு உலகம், உயிர் சகலமும்! கிரிக்கின்ற வரம்தா, வாணி!...”

垒一27G