பக்கம்:உயிரில் கலந்தது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விதியின் மனிதன்

அகிலன் அவர்கள் சாதாரணமாக அதிகாலையில்தான் கதை எழுதுவது வழக்கம். இந்தப் பழக்கத்தைப் பழகிக் கொள்ளுவதில் ஞானசீலனும் சிரத்தை கொண்டார். முன் பெல்லாம் பத்துமணி ஆட்டத்திற்கு சினிமா பார்த்துவிட்டு, அதற்கப்புறம் அறைக்கு வந்து, பிளாஸ்கில் டீயும் எழுது பல கையில் நியூஸ்ப்ரிண்ட் காகிதக் கத்தையும், கண் இலக்கில் சிகரெட் நெருப்புப் பெட்டியுமாகக் குந்தி, குதிரைப்பத்தயக் குதிரைக்கு ஈடாக, கண்மூடிய வெறிக்கிளர்ச்சியுடன் மூசு மூசு’ என்று எழுதித் தீர்ப்பது பழக்கம். மற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நாட்டம்; இவருக்கு இலக்கிய மனத்தின் சுகத்தெளிவில் ஒட்டுதல். மறுநாள் அவர் அலுவலகத்திற்குச் செல்லுவார். முதல் முறை பத்திரிகை உரிமையாளர், அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்துப் பயந்துபோய்'சி கேட்டார். விஷயம் பிடிப்பட்டது: வினயம் எடுபட்டது.

‘உடம்பை முதலில் பார்த்துக் கொள்ளவேணும். நீங்கள் பிரம்மசாரி, முதலில் உடம்புதான் முக்கியம். உங்களது மணக்குகை ஓவியங்களை வரைய வேண்டுமென்றால், உடற் சுவரைக் கண்காணிப்புடன் பேணுதல் வேண்டுமல்லவா? இப்படி இனியும் இராக்கண் பகல்கண் விழிக்க வேண்டாம். தினம் பகுதி பகுதியாக உங்கள் தொடர் பகுதிகளே எழுதி விட்டால், சிலாக்கியமாக இருக்காதா, ஞானசீலன்? என்ன சரிதானே? அலுவலகம் ஒன்றுதானே நம் இருவருக்கும் இடை விலுள்ள ஒட்டுறவு என்று எண்ணிவிடக் கூடாது. அலுவலகத் துடன் ஒட்டுறவல்லாத விஷயங்களும் நடபுக்களும் எத் தனயோ நம்மைச் சுற்றி, அதாவது உங்களையும் என்னையும் சுற்றி இருக்கின்றனவே, அவற்றுடனும், வாய்ப்பு தேவைப் பட்டால், பழக்கம் வைத்துக்கொள்ள விரும்புகிறவன் நான்