பக்கம்:உயிரில் கலந்தது.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


அதாவது, உங்கள் சொந்த வாழ்க்கையின் சுகதுக்கங்களிலும்

எனக்குப் பாகம் தரவேணும் என்று ஆசைப்படுகிறவன் நான். என்ன, சரிதானே?”

கிட்டத்தட்ட, மூன்று வருஷங்களுக்கு முன்பு மணிமுத்து வேலாயுதம் மனம் விட்டுப் பேசிய பேச்சின் தாத்பரியத்தை’ அடிக்கொருமுறை நினைத்துக்கொள்வார் ஞானசீலன். உறவும் உரிமையும் ஒட்டிவர எண்ணுகையில், எட்டி நிற்கக் கூடாது. அன்பு மனம் அழியாதது:அழியக் கூடாது! இந்த மனித மனம் அழியாமல் பாதுகாப்பதற்கு, இம்மாதிரியான உறவும் உரிமை பும் பரிவர்த்தனே செய்துகொள்ளப்பட வேண்டும், அப் போதுதான், பணத்தையும் கடந்து நிலைக்கும் பவித்திரமும், பண்பைக் கட்டிக்காக்கும் பாத்தியமும் வழிகாட்ட முடியும்’ என்று ஒரொரு சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார் அவர் என்றால், அதற்கும் உதாரணம் தந்து, உத்தாரனம் தந்த மனிதர் மணிமுத்து வேலாயுதம் அவர்களே. தம் முதலாளி யைப்பற்றி அவருக்குப் பொதுவாக உயர்ந்த அபிப்பிராயமே நிலவிவந்தது. -

இந்த அடிப்படிையான மன உணர்ச்சிச் சுழிப்புடனேயே, படுக்கையைவிட்டு எழுந்து, பிரஷ்-பேஸ் டிற்குக் கடமையைச் சுட்டிவிட்டு, மண்ணடித் திருப்பத்தில் பவழக்காரத் தெரு கூடு முனையிலிருந்த உடுப்பி கமலாபவனத்தில் ஒரு கப் காப்பி:ைச் சூடுபறக்க ஊற்றிக்கொண்டு திரும்பினர்.

ம் தரு, தெரு விளக்குகள், தெரு மனிதர்கள்!-முக் கோணத்தில் உறக்கம் ராசாங்கம் நடத்திய வேளையில், ஞானசீலன் எழுதவேண்டியவைகளை எழுதி முடிக்கவேண்டு மென்ற உடல் தினவுடனும் மன எழுச்சியுடனும் விரைவாக அறைமாடிக்குத் தாவி அறையில் வந்து அமர்ந்தபோதும், எப்படியோ தம் உரிமையாளரைப் பற்றிய நினைவுகள்தாம் பாலாடைபோலப் பரவிக் கிடந்தன. சென்ற வாரம் தான். மணிமுத்துவேலாயுதம் அவர்களின் பங்களாவுக்குச் சென்ற