பக்கம்:உயிரில் கலந்தது.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


போது, இப்படிப்பட்ட ஒரு குண்டைப் போடுவார் என்று: நான் துளியும் நினைக்கவே கிடையாது. ஆனலும் மனிதர் ரொம்பவும் கண்ணியமானவர். அங்கிருந்து புறப்பட்டுச்

செல்லும்போது, இது நம் சொந்த விஷயம். ஆனல் வியவ காரம் ஏதும் இல்லை; அதற்கான ஏதும் கிடையாது. எனவே உங்கள் இஷ்டப்படி,” , யோசித்து, உங்கள் அம்மாவுக்கும் யோசிக்க அவகாசம் கொடுத்து, பதமாகவும் பதனமாகவும் முடிவு சொல்லுங்கள். என் அக்காள் மகள் புஷ்பவல்லியின் படத்தைப் பார்த்தீர்களே நிஜமாகவே, அவர்கள் புஷ்பம் தான். சினிமாக்களிலே காட்டுவார்களே; அது மாதிரி பணக் காரர் வீட்டுப் பெண்ணை வலிய வந்து ஒரு ஏழையின் தலையில் கட்டும்போது, அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண்ணுக்கு, ஏதாவது ஒரு ‘ஒச்சம்-குறைபாடு இருக்குமே- அதுபோல, இங்கே எதுவும் இல்லே. என் கவலையெல்லாம், என் சகோதரி யின் பெண் உகந்த இடத்தில் போய் வாழ்க்கைப்பட வேண்டு மென்பதுதான். உங்களிடம் பொறுப்பும் கடமையும் மிகுந்: துள்ளன. ஆகவே, உங்களிடம் பங்குபெற வரும் பெண் நிச்சயம் மனம் கலங்க நேரிடவே நேரிடாது. வாணியின் துணைக்கு லக்ஷ்மியும் வந்துவிட்டால், அப்புறம் உங்களுக்கு. என்ன சஷ்டம் பேசாமல் உங்கள் இலக்கியப்பணியை சிவனே யென்று தொடர்ந்து நடத்தலாமே! ஆகவே, தீர யோசித்துச் சொல்லுங்கள். மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பொருளாதாரம் குறுக்கிடுவதைப் போலவே மனிதர்களின் காதல் பிரச்னைகளிலும் இந்தப் பொருளாதாரம் இதுவரை குறுக்கிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. ஆனல் இப் போக்கை நான் என்றுமே ஆதரித்தது இல்லை; அனுமதிக்கவும் விரும்பேன். உங்கள் தீர்ப்பு எனக்குச் சாதகமாக இருக்கு. மென்பதே என் நம்பிக்கை. மற்றதெல்லாம், ஆண்டவன் சித்தம். நம் சித்தங்களுக்கு சித்தம் வைக்கும் முதல்வன் அவன். அவன் விளையாட்டுப்படிதானே சகலமும் உலகத். திலே நடக்கிறது?’ என்று பவ்யமாகப் பேசி அனுப்பியதை ஞானசீலன் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தார். 2 الرم