பக்கம்:உயிரில் கலந்தது.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


எழுதுவதற்கு உரிய மனலயிப்பை உண்டாக்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தார் ஞானசீலன்-பூசாரி உடுக்கு கொட்டி, சாம்பிராணி துரபத்தை மோப்பம் பிடித்து, காளி உச்சாடனத்தைக்கைப்பற்ற முனைவதுண்டல்லவா, அதுபோல: அன்றைய காலப் பத்திரிகை ஹிந்து அவர் பார்வைக்காகக் காத்திருந்தது. வென்றவர்களே ஏசியிருந்த கலைஞரின் அமத் லான பேச்சைப்பற்றிப் படித்துவிட்டு, பிரிட்டிஷ் பிரதமரின் அழுத்தமான அயல்நாட்டுக் கொள்கையைக் குறித்து வந் திருந்த குறிப்பையும் பார்த்தார். நடந்த பொதுத் தேர்தலில் பொது மக்கள் நிரூபித்துக் காட்டிய நாட்டுப்பற்றைப் போற் நிய நேருஜி-காமராஜரின் வடக்கு-தெற்குப் பேச்சுக்களை ஒருமுனைப்படுத்திய மூளைத் தெளிவுடன் படித்தார். பிறகு என்ன தோன்றியதோ, விசுக்கென்று, தமிழரசி இதழின் முந்திய ஏட்டில் தம்முடைய வளர்கதை வளராமல் நின் நிருந்த இடத்தைப் பார்த்தார். எண்ணங்களுக்கு வல்லமை தரும் பராசக்தி பாரதியாருக்குக் கிட்டினரல்லவா? அம்மாதிரி ஞானசீலனுக்கு சக்தி உட்சாடனமோ, தேவி உபாசனையோ எதுவும் இருக்கவில்லை. என்றாலும், அவருள் ஒர் அமானுஷ்ய யாக உதவேகம் அவ்வப்போது எழுவது இயல்பு. அத் தகைய உணர்வின் விழிப்பு அவரைச் சாட்டை சொடுக்கச் செய்தது. அதுதருணம் அவர் கண்கள் கலங்கி வந்தன. மனம் மெய்ப்பாடு உணர்ந்தலயிப்பிலும் லயத்திலும் கும் மாளம் போட்டு, ஆன்றவிந்து அடங்கிய பக்குவம் அடைந்தது.

பேணுவை உதறிக்கொண்டு எழுதத் தொடங்கிஞர் அவர். அப்பொழுது, வாணியின் வதனம் அவரது விழித்த இலக்கிய நெஞ்சத்தில் நிழலாட, நிழலோட்டத் தொடங்கியது. வாணியையே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ‘கொண்டுவிட்ட தம்முடைய முடிவைப்பற்றியும் எண்ணமிட் டார். அப்பொழுது, தம் முதலாளியை திரும்பவும் மனத் தில் நிறுத்தவேண்டிய நிலை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரகாலமாக தாம் தம் முதலாளியிடம் பட்டும்