பக்கம்:உயிரில் கலந்தது.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


படாமலும் ஒழுகி வரும் இக்கட்டானதொரு கட்டத்தையும் எடைபோட்டுப் பார்த்துக்கொண்டார். வாணியைப்பற்றி உருவான ஒரு முடிவில், தம் எழுத்துத் துறைக்கு ஏற்ப, தாமே ஏற்படுத்துக் கொள்ளப் போவதாக முடிவுகட்டிக்கொண்ட ஒரு முடிவும் முடிவு கண்டதோ?

ஹார்பர் சங்கு ஒலித்தது. மணி எட்டு. அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள் சலாட்ஜ் நண்பர்கள். - -

ஞானசீலனுக்குக் கதையில் சிந்தை பதிந்தால்தானே? அவரது சித்தமிசை குடிகொண்ட வாணியல்லவா அப்போது அவரைத் தன் வயப்படுத்திக் கொண்டிருந்தாள்? *:

“வாணி, உன் பதிலுக்காகவே நான் காத்திருக்கிறேன். உன் மனம் விரும்பிய பிரகாரமே, என் மனமும் விரும்பிய விந்தையை நாம் இருவரும் கூட்டாகப் பின்னர் ரசிப்போம். விதியைவிட்டு விலகிவிட மனிதல்ை முடியாது. மனிதன் , விதியின் ஒரு கருவி. இந்தக் கொள்கைக்கு நம் இருவரிடை யிலும் நிகழப் போகின்ற பந்தபாசமே ஆதாரக் கொள்கை. ஆாகிவிடும். இல்லையா, வாணி என் எழுத்தை ரசித்த நீ

என்னையும் ரசிக்கப்போகிறாய்! இல்லையா, வாணி? உன் எழிலை ரசித்த நான் உன் எழுத்தை'யும் ரசிக்கப் போகிறேன்: இல்லையா, வாணி? நம் காதற்கனவு ஈடேறப் போகிறது. இல்லையா, வாணி?

குளித்து, பலகாரம் சாப்பிட்டுவிட்டு, ஆபீசுக்குப் புறப் பட ஆயத்தமாளுர் ஞானசீலன். விரிந்துகிடந்த புத்தகங்களை ஒழுங்கு படுத்தியபோது, “விவேகம் வளருமுன்னே விவாகம் கூடாது! விவேகம் வந்த மனம் விவாகத்தை நாடாது’ என்ற

பத்திரிகைத் துணுக்கு ஒன்றை ரசித்துச் சிரித்தபடியே, புறம் பட்டார்.