பக்கம்:உயிரில் கலந்தது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மாரியம்மன் துணை

கிடர்க்காவுக்குப் பதில் வணக்கம் சொல்லியானதும், மாடிக்கு விரைந்தார் ஞானசீலன், வழக்கம்போலவே, அலு: வலக நண்பர்கள் வணக்கம் சொன்னர்கள். அவர் கையை உயர்த்தி வணங்கியபின், சுற்றிலும் பார்த்தபடி தமது தனி யறைக்குள் நுழைந்தபோது, நெஞ்சில் நுழைந்து இடம் பற்றி யிருந்த மேதைகளின் படங்களை உள்ளக்கிழியில் ஒவியமாக்கிப் பார்த்தார். தமிழ்த் தென்றல், சிலம்புச் செல்வர். நாமக்கல் கவிஞர், தமிழகக் காந்தி, பாரத ஜோதி நேருஜி, ராஜாஜி, வங்கக்கவி, நேதாஜி போன்ற பலதரப்பட்ட செம்மல்களின் புகழ்ச்சிக்குரிய தொண்டுகளே கரும்புக்கணுக்களைச் சுவைப்பது போல ரசித்துக்கொண்டே, இருக்கையில் அமரலாஞர். மேஜைமீது படுக்கை வசத்தில் ைவ க் க ப் ப ட் டி ரு ந் த கண்ணுடித் தகட்டில் தெரிந்த முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினர். கையிலிருந்து தோல்பையை வைத்தார், மீண்டும் ஏதோ சிந்தனை சூழ, ஓர் அரைக்கணப் பொழுதை நழுவவிட்டார். பிறகு, நாற்காலியில் கிடந்த கைபிடித் துணியினுல் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அன்றை யக் கடன் நினைவில் எழுந்தது. தோல்பையைப் பிரித்தார். கனம் ஏறியிருந்தது பை. ஊரிலிருந்து வந்ததிலிருந்து, அவர் நினைத்துக் கொண்டிருந்தபடி, அந்தப் பையின் கனத்தைக் குறைக்க நேரமில்லை. எழுதவேண்டுமென்று எடுத்த தாள்களே வெளியே எடுத்து வைத்தார். பிள்ளையார் சுழி போடப்பட்ட துடன் சரி, இதழ்மலர இடைவேளை இருந்தது. ஆகவே, அவருக்குப் பதட்டம் ஏற்படக் காளுேம்! நல்லதுதானே!

எதிர்ச்சிறகிலிருந்து சிறகு கட்டிப் பறந்து படர்ந்து வந்தது காலை வெய்யில், r . . *

பையன் கெட்டிக்காரன் ஆயிற்றே லாகவமாகக் கதவை

ஒருக்களித்து முடின்ை.