பக்கம்:உயிரில் கலந்தது.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

.

“இவர்களைப்பற்றி நாம் கவலைப்படுவதும், எங்கள் பத்திரி கையில் எழுதுவதும் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனல் ஒன்று மட்டும் உறுதி. இன்றைய நிலையிலே, பொதுஜன ரசிகர்கள் இருக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் ரொம்பவும் விழிப்புடன் இருக்கப் பழகிவிட்டார்கள். இதோ பாருங்கள், சில ரகசியக் கடிதங்கள். அன்பர்கள் குறிப்பிட்டுள்ள இலக்கியத் திருட்டு ரகசியத்தை எப்போதோ, நான் அறிந்தவன். இங்கே பாருங்கள், இந்த அயல்மொழி நூல்களே. இவற்றைத் தமிழாக்கி வெளியிட அனுமதி கோரியிருக்கிறேன். அனுமதி பெற்று, இவற்றை வெளியிட்டால் ஐந்தாறு பேர்வழிகளின் :புகழ் ஆலாய்ப் பறந்துவிடும்!...இப்படிப்பட்ட ரசிகர்களின் “தைரியத்தைப் பார்க்கையில்...எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது!’ -

‘வாஸ்தவம்தான் ஸார். புதுமைப்பித்தன்கூட, பிறர் .கதைகளைத் திருடுவதைப்பற்றி...”

“தெரியும், தெரியும்!...புதுமைப்பித்தன் தலைசிறந்த கதாசிரியர். என் வணக்கத்துக்குரியவர். என்றாலும், சிருஷ்டி முடிச்சுக்குக் கட்டுப்பட்டோ என்னவோ, அவர் பெயரிலும் கூட சில்லறைக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன!...ம்... அவரைப்பற்றி மட்டுந்தான?...ம்.........அமரரானவர்களைப் பற்றியெல்லாம் இப்பொழுது பேச எனக்கு மனம் வரவில்லை!”

“உண்மைதான்!”

‘இன்னென்று. புதுமைப்பித்தன் பெயரால் அவருக்குப் .பின் வந்துள்ள சில புத்தங்கள், தொகுப்புகளினலேகூட மேற்படி குற்றச் சாட்டுகள் பிறந்திருக்கவும்கூடும்! அவர் பேரை வைத்து அவலப் பிழைப்பு நடத்தும் திருக்கூட்டத்தின் தவருகவும் இருக்கலாம். இப்படிக்கூட நான் ஐயப்படாமல்

இல்லை!” -

புதுமைப்பித்தன் ரசமட்டம் ஆன திருவிளையாடல்’ :புராணமாக விரிந்தது: w -