பக்கம்:உயிரில் கலந்தது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


திரையுலகின் மாரீசத்தனத்தைப் பற்றிய சூடான பேச்சும் இடம் பெற்றது. முதல் காளாஞ்சி என்ற கதையைக் காப்பியடித்து திரையிடப்பட்ட நாட்டுக்கொரு நல்லவள்” குறித்த விஷயமும் அம்பலமானது.

உண்மையான இலக்கியப்பணி செய்த இலக்கியப் பெரு, வள்ளலைப் பற்றிய பேச்சில் உரையாடல் முற்றுப் பெற்றது.

விடை பெற்றுச் சென்றார்கள். “சினிமாக்காரர்களைத்தான் ரசிகர்கள் பார்க்கத் துடி யாய்த் துடிப்பது வழக்கம். ஆனல் என்போன்ற எழுத்தாளர் களைக்கூட பார்ப்பதற்கு தவம் கிடக்கும் ஆட்கள் இருப்பதி: லிருந்து, தமிழ் இலக்கியத்துக்குள்ள நன் மதிப்பு என்றுமே. மாருது; குறையாது என்பது புலனுகிறது...!”

வந்திருந்த கதைகளின் உறைகளைப் பிரித்தார். - ஒருகதை பளிச்சென்றிருந்தது. குந்தவ்வை’ என்று. பெயருடன் கூடிய கதாசிரியையின் கற்பனை அது. யாருமற்ற, அருமைப் படைப்பான அபலையின் கதை அது. பிரசுரத்துக்குத் தேர்வு பெற்றிருப்பதாகக் கடிதம் அனுப்பச் செய்துவிட்டு, போனேக்ராம் ஒன்று அனுப்பவும் ஏற்பாடு செய்தார். ஞானசீலன். . . . . .” . .

செய்தி: வருகிற வெள்ளிக்கிழமை புறப்படுகிறேன். பிற. நேரில். ஞானசீலன்.”

18 யார் இந்தக் குந்தவ்வை?

ருஷ்யநாட்டுச் சிறுகதைத் தொகுப்பின் முதல் ஏட்டைப் புரட்டிய பொழுது, ஞானசீலன் எழும்பூர் சந்திப்பைக் கண்டார். அந்தப் புத்தகத்தின் கடைசி ஏட்டைப் படித்து முடிந்தபோது, தஞ்சாவூர்ச் சந்திப்பைத் தரிசித்தார்.