பக்கம்:உயிரில் கலந்தது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


விழுப்புரத்தில் வாங்கிய தமிழ்ப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருக்கையில், அச்சுப்பிழைகள் மலிந்த ஒரு பகுதியைப் திரும்பத் திருப்பப் படித்தார். அச்சகமொன்றில் பிழை திருத்தும் குமாஸ்தா ஒருவன், தன் பெயரும் ஒரு புத்தக அட்டையில் வரவேண்டுமென்று ஆசைப்பட்டு, அந்த அச்சகத்தில் வேலைக்கு வந்திருந்த மற்றாெரு பிரபலமான ஆசிரியரது தொகுப்பின் மேலட்டையில் அவர் பெயருக்குப் பதிலாக தன் பெயரை “கம்போஸ் செய்து அழகு பார்த்து, அமைதி பார்த்த விந்தைக் கதைதான் அவருக்கு மனத்தில் பளிச்சிட்டது. கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் சுழன்றது. ம்...இந்த ரஷ்யநாட்டுக் கதையை திருடிக்கூட தமிழில் எழுதித் தொலைத்து விட்டார்களா? ஊம். வரட்டும்!” என்று மன திற்குள் எண்ணிக் கொண்டார். பாவம்’... மாரீசன்’ பேளுவை எடுத்து மண்டை உச்சியில் குத்திக் கொண்டார்.

பெட்டியைவிட்டு இறங்கினர். இறங்கும் பொழுது ஏதோ ஒரு பாக்கெட் எடிஷன் தட்டுப்பட்டது. எடுத்துக் கொண்டு இறங்கினுர், - -

சரித்திரப் பெருமை உடலெடுத்த தஞ்சையம்பதியின் அழகும் அந்தமும் ஜங்க்ஷனிலேயே காணக்கிடைத்தன. முந்திரிப்பருப்பு, குடமிளகாய், வெட்டிவேர் கதம்பம் எல்லாம் மணம்பரப்பி மகிழ்ந்தன. விடிபொழுதின் இனம்புரியாக் குதுரகலத்துடன் ஞானசீலன் உலாவிக் கொண்டிருந்தார். கதம்பம் நாலு முழம் வாங்கிக் கொண்டார். அவருக்குள் ளாகவே நமட்டுச் சிரிப்பு நெருடிக் கொண்டு வெளிப்பட்டது.

ஐ. ஆர். ஆர். காப்பியிலும் சிகரெட்டிலும் அவர் புது ஜன்மம் எடுத்தார். தஞ்சையில் தங்கவேண்டிய நாட்களிலே தாம் செய்தாக வேண்டிய காரியங்களை நினைத்துக் கொண்டார். முதலாவதாக, தாம் எழுதவேண்டிய ‘தண்ணீர்த் திருவிழா” என்ற வள்ர்கதைக்குச் சுருக்கம் தயாரிக்க வேண்டும். பர்மியர்களின் வாழ்வின் நிலையைக்