பக்கம்:உயிரில் கலந்தது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

.

“நீ என்ன அம்மா! இப்போ நான் நாலு ஐந்து பவுண்ட். கூடுதலாகவே இருக்கேன், உங்களுக்கு எம்மேலே இருக்கக் கூடிய பாசத்துக்கு நான் ஒரே மூச்சிலே ஒரு நூறு பவுண்ட். எடை கூடிவிட்டால்கூட, உன் தாய்மனம் திருப்தியடை. யாதே!...இல்லியா அம்மா?’ என்று சாங்கோபாங்கமாக உரை யொன்று நிகழ்த்தி, பெற்றவளைச் சமாதானப்படுத்த, வேண்டியவராளுர் அவர். -

அன்னேக்கு ஆறுதல் ஊட்டியதும், அவரது விழி நோக்கு, வழி ஒன்றை இலக்குச் சுட்டிச் சுற்றியது. வாணி எங்கே?

சென்ற முறை வந்த தருணத்தில், வாய்த்திட்ட நல்லதிர்ஷ்டத்துக்கு நிகராக, அவர் அவளைச் சந்தித்த பாங்கை யும் பாவனையையும் நினைவுக் குழியில் தேக்கினர். நிலைப்படி மறைவில் நின்று தம்மைப் பார்க்கவேண்டி, கள்ளவிழிப் பார்வையைத் துரது அனுப்ப, அதே சடுதியில் தானும் நேர் முகப் பார்வையை பதிலுக்கு அனுப்பிய விவரத்தையும் அவர் மறக்கவா, வாணியின் நினைவில் இப்பொழுது மனம் சுற்றி யலைகிறார்?...

கூப்பிடு தொலைவில், கூப்பிடாமல் ஒடிக் கொண்டிருந்த பொங்கு விரிகாவிரிக்கு ஓடினர்; அன்னை கொடுத்த காலைக் காப்பி தொண்டைக்குள் நின்றது. பாசம் தொண்டை நிரம்பியதாயிற்றே? மானம்புச் சாவடித் துண்டை இடிப்பில் கட்டிக்கொண்டு சோப்புப் பெட்டியுடன் படிக்கட்டில் இறங் கினர். புது வெள்ளம் வந்திருந்த புதிது அல்லவா? ஊழிக் கூத்துத் தெய்வத்தின் சித்தமாக காவிரி பொங்கியது. -

முதல் முக்குழிப்பு முக்குளித்து எழுந்தார் ஞானசீலன். உதய சூரியனின் ஒளிக்கற்றைகள் அவருக்கு இதம் தந்த விதத்தை அனுபவித்தவராக, தலையை உயர்த்தி நீர்மட் டத்தை விட்டு எழுந்தபோது அவர் கண்ட காட்சி அவருக்கு. மலைப்பைக் கொடுத்தது. அவர் தம்முடைய தலையைத் தாழ்த்திக்கொண்டார். ஆளுலும், அவரையும் மீறிய வகை யில் ஆவர் கண்கள் எதிர்த் துறைக்கு நாடி ஓடின.