பக்கம்:உயிரில் கலந்தது.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


அழகு அங்கு அவதாரம் எடுத்துக் கொண்டிருந்தது.

அழகின் ஆதரிசமா அது?

<tr೯.

தம்மைப் பார்த்துவிட்ட வாணி குறுவிழி குறுக்கி, இதழ் நகை விரித்து, இளநெஞ்சம் விம்மி, எட்டி நின்றபடியே ஒட்டி வந்து, பேசாமல் பேசிவிட்டாளே பேரழகி வாணி?...

ஞான சீலன் முதல் முறையாக நாணம் ஏந்தினர். குளிர் போன இடம் தெரியவில்லை. ஆனல் குமரி வாணி போன இடமும் அவரது குது.ாகலம் புறப்பட்ட இடமும் அவருக்கு அத்துபடி.

புத்துணர்ச்சி பெற்றுப் பலகாரம் சாப்பிட்டு முடித்தது, ஞாலசீலனின் ஒரக்கண் பார்வைக்கு ஒயிலான இலக்குப் புள்ளியானள் வாணி. தளரமுடிந்த கூந்தல் அவர் பார்வை யில் தட்டுப்பட்டது. வழக்கம்போல, அதே நிலைப்படி மறை வில்தான் இப்பொழுதும் அவள் நின்று கொண்டிருந்தாள்.

  • வாணி, வா...!” என்று கூப்பிட்டார் அவர். -

பொய்க் கோபம் தாங்கி, உண்மை நாணம் ஏந்தி நடந்து வந்தாள், ஏந்திழையாள்.

‘காப்பி...அம்மா தந்தாங்க!”

‘இல்லையே, கா ப் பி ைய இப்பொழுது நீயல்லவா தருகிறாய்?” -

‘நீங்கள் கதை எழுதுபவர்கள்...”

“நீயும் எழுதேன்!”

தெரியாது.”

தெரிய வேண்டாம். உன்னையும் அறியாமல் நீ தான் கதை எழுதிக் காட்டுகிருயே; அதைப் பார்த்துத்தானே நான் நகல் எடுக்கிறேன்!” *

என்ன சொல்கிறீர்கள்?”

5-270