பக்கம்:உயிரில் கலந்தது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

"நீ தான் கதை; அதாவது, நீதான் என் கதை: எனக்குக் கதை என்கிறேன். என் எழுத்துக் கடமையின் அர்த்த புஷ்டியான பிம்பம் அல்லவா நீ? நீ இல்லையேல் நான் இல்லை!”

"எனக்குப் புரியமாட்டேன் என்கிறதே!...”

"போகப் போகப் புரியும்!”

“சரி. அப்பா உங்களைப் பார்க்க வந்து விடுவார்.”

"வரட்டுமே!"

“காப்பி.!”

“இதோ!"

"சாப்பிடுங்கள் என்றால்...”

“இதே...சாப்பிட்டாச்சு என்றால்...”

கள்ளச் சிசிப்பு அள்ள முடியாமல் வழிந்தது.

பூவையைப் பார்த்தவருக்குப் பூவின் நினைவு ரதம் ஏறி வந்தது. பூவை, பூவைக்கு எப்படிக் கொடுப்பது? 'கன்னிப் பெண்ணுக்கு கன்னி கழியு முன்னே ஆடவன், என்னதான் உறவும் உரிமையும் நிர்ணயிக்கப்பட்டாலும், கொடுப்பது உகந்த நாகரீகமாகுமா?...'அம்மாவிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்வதை அவர் விரும்புவாரா?

“வாணி, என் தந்தி கிடைத்ததல்லவா?”

“ஓ!..."

“நல்லது.”

“தந்தியைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்!”

“நல்ல விஷயத்தை இன்னும் கொஞ்சம் விரைவாக உனக்கு எட்டச் செய்ய ஆசைப்பட்டேன். நீ சொல்வதும் நியாயம்தான். பிறகுதான் எனக்கு நினைப்பு வந்தது, நீ பயப்படுவாயே என்று!...”

“ஒரு சேதி”