பக்கம்:உயிரில் கலந்தது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


“சொல்லக் கூடாதா?”

“பூ வாங்கி வந்திருக்கிறேன்!”

“யாருக்கு?”

“உனக்குத்தான்!"

“கொடுங்களேன்!"

“பேஷ், பேஷ்!”

இளம் பொற்கிரணங்கள் வெண்சாமரம் வீச, அருமை. கனவுகள் ஆரத்தி எடுக்க, அன்னப்படகில் அமர்ந்து ராஜ வீதியைச் சுற்றிலும் பவனிவரும் அரசிளங்குமரிகூட இந்த வாணியிடம் தோற்றுப் போகத்தான் வேண்டும்!-இப்படி எண்ணியபடியே, பூவைக் கொடுத்தார்.

பூமணம் சூழ வியாபித்தது.

மலையாள நாட்டு டாக்டர் பாஸ்கர் ஒரு சமயம் சொன்ன வடக்கன் பாட்டு ஒன்று அவருக்கு மனப்பாடமாகியிருந்தது.

“...வயநாடன் மஞ்சள் முறிச்ச போலெ
குன்னத்துக் கொன்னையும் பூத்த போலெ
இளமாவின் தய்யு தளிர்த்த போலெ
கதிரவனாய தின் வர்ணம் போலெ
எந்து நிறமென்னு சொல்லேண்டு ஞான்!...”

வாணிக்காகத்தான் அப்பாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் கைகூடியதோ? வயநாடன் மஞ்சள் தேய்த்ததும் ஒளிர்வதைப் போலவும், குன்றில் ஒளிரும் கொன்றைப் பூவைப் போலவும் இளமாந்தளிர் போலவும், கதிரவனின் செந்நிறம் போலவும் இருந்தாளாம் அந்த அழகி...ஏறக்குறைய அர்த்தம் பொருந்தியிருந்தது போலவே பிரமை,எப்போதோ கேட்ட பாட்டு.

'இந்த அழகிக்கு என் வாணி குறைந்தவளா என்ன? ஊஹும், ஒரு பொழுதும் இல்லை!...'என்று எண்ணிப் பெருமைப்பட்டு, அந்தப் பெருமையில் பெருமிதம் கண்ட சமயத்தில், 'காதல் என்பது சிறுபிள்ளை விளையாட்டுப் போல’ என்று