பக்கம்:உயிரில் கலந்தது.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஏடு இருபத்து மூன்று:

‘அவர்’ரொம்பவும் நல்லவர். இதயம் படைத்த எழுத்தாளர். என்னையும் அறியாமல் என் அனுமதியையும் எதிர்பாராமல், என் உள்ளம் அவரையே சதா ஏன் நாடுகிறது?...

ஏடு முப்பது:

'அவர்'தன் கதையில் எழுதியிருப்பதில் ஒரு இடம் எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. “தியாகம் என்ற குண நலன் சொல்லிக் கொண்டு வருவது இல்லை; சொல்லியும் தெரிவது கிடையாது. உள்ளத்தில் உதிரத்துடன் ஊறிப் பக்குவப்படுத்தும் இப்பண்புதான் மனிதனே மனிதனுக உயர்த்திக்காட்டுவது!” எவ்வளவு சத்தான வாசகம்!

ஏடு முப்பத்தைந்து:

கோசலை அம்மாள் சொன்னாள். அவர் என்னைப் பற்றிக் கேட்டாராம். தெய்வமே, இந்த ஒரு வரத்தையாகிலும் தா. என் மனம் அவரை விரும்புகிறது. ஆகவே, என்னேச் சோதிக்காமல், என் ஆசையைப் பூர்த்தி செய்!.

ஏடு முப்பத்தெட்டு:

எனக்கே ஆச்சர்யமாகப் போய் விட்டதே!...அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட சமயம் நான் “என் நினைவு ஒன்றுடன் இங்கிருந்து புறப்பட்டு, அதே என் நினைவு ஒன்றுடனே அங்கிருந்து புறப்பட்டு வாருங்கள்!” என்று எப்படியோ ‘டயலாக்’ பேசி விட்டேனே!...”

நடந்த சிலவற்றை நினைத்துப் பார்க்கவும், படித்த சில: குறிப்புக்களை மீண்டும் எண்ணிப் பார்க்கவும் முனைந்தார் ஞானசீலன். அவருக்கு அப்பொழுது தூக்கம் விழிகளைச் சுற்றியது.

பாம்புகளை ஆட்டிவிப்பவர்களுக்கென்று மராத்திய மன்னர்களால் நிர்மானிக்கப் பட்டதாகச் சொல்லப்படுகின்ற அந்தப் பாம்பாட்டித் தெரு நிச்சிந்தையாகக் கண்வளர்ந்து: கொண்டிருந்தது.