பக்கம்:உயிரில் கலந்தது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நேத்திரங்களின் அமைப்புச் சுழற்சியும் அறிவித்துக் கொண்டிருந்தன.

பொழுதுபட்டது.

ஒளி துளிர்த்தது.

“ஹல்லோ மிஸ்டர் ஞானசீலன்!” என்ற குரல் அவர் பிடரியைப் பிடித்து இழுத்து நிறுத்தியது. முகத்தில் முத்திட்டுப் பரப்பிய வேர்வையைத் துடைத்தார். பிறகு ஏறிட்டுப் பார்த்தார். இரு கண்களிலும் இரு உருவங்கள் தோன்றின. “வாருங்கள், செளக்கியமா?” என்று நகைக்கீற்றின் பிரகாசத்தில் வாஞ்சையையும் பிரதிபலித்தார். அருகில், குனிந்த தலையை நிமிர்த்தி நிமித்திப் பார்த்தவளாக, அழகுப் பெண் ஒருத்தி நிற்கக் கண்டபோது, ஞானசீலனுக்கு மனத்தையும் புலன்களையும் என்னவோ செய்தது. எழுத்தாளர்கள், ஒவியர் கள் என்றால் அவர்களுக்குத்தான் அழகை ‘உபாசிக்க’த் தெரியும். ஏனென்றால் அவர்களுக்கு அந்த அழகுதான் வாழ்வின் பொருளாகிறது. வாழ்வே அழகாகவும், அழகே வாழ்வாகவும் ஆகி முடிகிற ஒரு கட்டம், ஒரு விதி.

வந்தவர் மாசிலாமணி.

“உட்காருங்கள்.”

“பரவாயில்லை. நான் போகவேணும். இதுதான் என் பெண்!...கமலாட்சின்னு பேர், முன்னே சொல்லியிருக்கேன். எங்கே உங்களுக்கு நினைவிருக்கப் போகுது?...உங்க கதையிலே நீங்க உண்டாக்கிற பேருங்களை நினைப்பு வைக்கிறதுக்கே உங்களுக்கு முடியாது! அம்மா, இவர்தான் கதாசிரியர் ஞானசீலன். ஸார், உங்களுடைய கதைகள்ளு, என் பெண்ணுக்கு ஏகப் பித்து ஸார்!...”

அந்தப் பெண் கமலாட்சி, ‘ஞானசீலன்’ என்ற நாமத்தைக் கேட்டவுடன், எழில் மிகுந்த லாகவம் சொட்டிய பூக்கரங்களை துளினம் சேர்த்து உயர்த்தி, “வணக்கம் ஸார்!” என்றாள்.