பக்கம்:உயிரில் கலந்தது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அம்மா சாப்பாட்டுக்குக் கூப்பிட்டாள்.

கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தார். அமைதியும் இரங்கி வந்தது!

‘இலக்கியத் திருட்டுக்கள்’ பற்றி நடப்பு மாதத்துக்கு எழுதியிருந்த கட்டுரை 'கம்போஸ்'ஆகி வந்திருந்தது. பகிரங்கமாக எழுதியிருந்தார்; குற்றவாளிகள் சிலர் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ‘இவர்கள் தங்கள் குற்றங்களே இனியும் உணராவிட்டால், நடக்கவிருக்கும் எழுத்தாளர் மாநாட்டிலும் இவர்களே மேடையேற்றிவிட வேண்டியது தான்’

ஒரு வாரத்தில் வந்துவிடுவதாகக் கூறி வந்தவர், மறு முறையும் தம் முதலாளிக்குத் தபால் எழுதினார். அதில், தாம் வானியையே மணக்க முடிவு செய்திருப்பதாகவும் சேர்த்திருந்தார்.

விடிந்ததும், வாணி வருவாள். அவளிடம் நாட்குறிப்பு. விருத்தாந்தங்களைப்பற்றி அறியவேண்டும். இது ஞானசீலனின் திட்டம்.

முகம் கழுவிச் சாப்பிட உட்கார்ந்தார். விபூதி மடல் தெரிந்தது. துளி எடுத்து நெற்றியில் பூசினார்; அமர்ந்தார். திருவாரூர் மாசிலாமணி வந்துபோன விவரம் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுதும் அவரைக் கமலாட்சி ஆட்கொண்டாள்!

சில நிமிஷத் தேய்வு.

ஞானசீலனுக்கு அப்போது ‘விடுதலை’ கிடைத்தது.

ஆனால் அவரது இதயச் சிறையில் அடைபட்டுக் கிடந்த வாணிக்கு மாத்திரம் அப்போது ‘விடுதலை’ கிட்டவே யில்லை;