பக்கம்:உயிரில் கலந்தது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

எழுதிக் கேட்டுவிட்ட அவளது அந்தரங்க சுத்தியான நேர்மைத்திறன் பாய்ச்சல் காட்டியது. அது முடிந்த கையுடன், “அம்மா, எனக்கு வாணியை நிரம்பவும் பிடித்து விட்டது!” என்ற முத்தாய்ப்பு வைத்த பவித்திரத்தையும் நினைவில் கொண்டார்.

‘வைகாசி முடித்தால் எங்கள் திருமணமும் முடிந்துவிடும்!’ என்ற நினைவு முல்லைக்கொடியாக மனப்பந்தலில் படர்ந்தது. மனப்பந்தல் காட்சி தர, முல்லை மணம் சுகந்தம் வீச, மனமோ கனக் கனவின் கதாநாயாகியாக வானி விளையாட, காலம் கரைத்தது.

அழைப்புக்கள் அச்சிடக் கொடுக்க அடுத்த வாரம் நல்ல நாளாம்!-வாணி தெரிவித்தாள்.

“ஓ. கே!”

காதல் பதுமையாக நின்றாள் வாணி.

ஆடம்பரமில்லாத, பரிசுத்தமான எழில் நிரம்பி நின்றது .

‘வாணியை நான் அடைவதற்காக, உண்மையிலேயே நான் தியாகம் செய்துதான் இருக்கிறேன்; இதுவே எனக்கு மாபெரும் பலமாகவும் ஆறுதலாகவும் இருக்கும்! இப்படிப்பட்ட காதலுணர்வுதானே என்னைத் தியாகியாக ஆக்கியிருக்கிறது! ஆஹா! இந்தத் தியாகமனம்தான் நான் உணரத் தலைப்பட்டுள்ள காதலெனும் தத்துவத்திற்குப் பொருளோ?’

வாணியின் நாட்குறிப்புப்பற்றி துப்புத் துலக்கவேண்டுமென்ற ஆதுரத்தில், பேச வாயெடுத்தபோது, அவரது நண்பர் ஏகலைவன் எல்லையம்மன் கோவில் தெருவிலிருந்து வந்தார்.

வாணி மரியாதையாக ஒதுங்கி நின்றாள்.

“வாணி இது!” என்று நாணம் சிலிர்க்கச் சொன்னார்.

“ஓஹோ!” என்று வந்தவர் கைகளைக் கூப்பினார்.

வளைக்கரங்களிலும் வணக்கம் இருந்தது.