பக்கம்:உயிரில் கலந்தது.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


இனியும் என்னே அளுதையாக விடமாட்டார் என் ஆண்டவன்!” என்று தேம்பத் தொடங்கிளுள் தவசீலி. மாரகச்

சேலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது!

19. விதியைச் சந்தித்தார்!

ஞானலேன் ‘விதியைச் சந்தித்ததில்லை என்றாலும், அப்பொழுது அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் உருவானது: விதியை அவர் சந்திக்க விரும்பாவிட்டாலும், விதி அவரைப் பழக்கப்படுத்திக் கொள்ள விழைந்ததுபோலும் அழகைச் சந்திக்கக் காத்திருந்த அவர், அதற்கெனவே காத்திருந்த களி, ஆவல், விண்ணடைந்த விளைவு போன்ற மஒேலயப் பின்ன ணிையை உடன் அமர்த்திக் கொண்டு இருந்த சமயத்தில் குந்தவ்வை என்ற மாற்றுப் பெயர் விளையாட்டுக் காட்டி, அப்புறம் சற்றைப் பொழுதிற்கெல்லாம் சுய உருவைக் காட்ட முனைந்திட்ட திட்டத்தை ஏந்தி நின்ற அத்தப் பெண் தவசீலியை மலுபடிப் பார்ப்பதற்கு அவருக்கு நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் கூடுதலாகத் தேவைப்பட்டன. விதியைச் சந்தித்தாற் போலவே அவருள் ஒரு மன உணர்வும் மனப்

பான்மையும் தோன்றலாயின!

வெளிச்சுற்று வட்டத்தில் இதுவரை தவித்துக் கொண் டிருந்த ஞானசீலன், இப்பொழுது இதயத்தின் உட்புறவட்டத் தில் சுற்றினர். மனிதாபிமானம் மிகுந்த ஞானசீலன் சுற்றி ஞரா? இல்லை. மனிதாபிமானத்தை நிறுவை இட்டுக் கணிக்கக் கூடிய எழுத்தாளர் ஞானசீலன் சுற்றிஞரா? என்னவோ, தவசீலியும் அவள் உரைத்த சொற்களும் சுற்றிச் சுழன்று

கொண்டேயிருந்தன. -

தாழ்த்திவிட்டிருந்த கண்களை உயர்த்திவிடக் கருதி, மெல்ல-மெல்லத் தலையை நிமிர்த்தினர் பூப்போட்ட