இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"உயிரோவியம்"
பாடல்கள்:திரு கு.சா.கிருஷ்ணமூர்த்தி
நடராஜன்
(1)தொகையறா
உயிர் ஓவியமே!...... என் ஜீவியமே!...
உயர் காவியமே ! பாட்டு
உயிரோவியமே! காதல் பேறே ! உயர் காவியமே! -
கரும்பின் சாறே! (உ)
கலையெழில் காட்டும்தேவியே கற்பகமே! சஞ்சீவியே! உலகினிலே என்ஆவியே! உவமையில் லாதவள் நீயே!...ஆ!- (உ) எண்ணமெல்லாம்வீண்போனதே!
என்
இன்பக் கனவும் மண் ஆனதே!
உளக்
கண்ணில் உன்னுருவம் தோனுதே!
பின்
காணுது மனமும் நானுதே! (உ )
உல்லாசமாய் வான் மீதிலே உலாவி மகிழும் போதிலே பொல்லாத சமூகச் சூதிலே பொசுக்குண்டோம் வஞ்சத்தியிலே!
(உ )