10
வீராசாமி
பல்லவி
(2) மனுசாவதாரமின்னுதெரிஞ்சுக்கோ எ பொம்புளே! புரிஞ்சுக்கோ (ம)
அநு பல்லவி முனிசாமி புள்ளையிலே மூத்தபுள்ளே வீராசாமி (ம)
ஒருதினுசா இன்னிமேலே என்னே எளிசாநினைக்காதேசொன்னேன்மமிஞ்சிப் பேசற பொம்பளைங்களே கொஞ்சிக்கொஞ்சி அடக்கும்ஆம்பிளே (ம) ராமாவதாரம், கிருஷ்ணவதாரம், சிங்காவதாரம், கல்காவதாரம், எல்லா அவதாரத்தையும் ஏட்டிலே எளுதி வச்ச (ம)
3 கற்பகம்
"திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்(று)இவ்அங்கன் உலகு அளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரிநாடன் திகிரிபோல்பொற்கோட்டு மேரு வலம் திரி தலான் மாமழைபோற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலியுலகிற்(கு)அவன்அளிபோல் மேனின்று தான்சுரத்த லான்.
(சிலப்பதிகாரம்) நடராஜன் (4) பல்லவி
சிலப்பதிகாரப் பேரிலக்கியப் பெருமை செப்புவ தென்பது யாருக்கும் அருமை (சி)