பக்கம்:உரிமைப் பெண்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

உரிமைப் பெண்

 மூடிக்கொண்டே, “சடையா, வா நாம் துாரப் பிரயாணம் போகலாம்” என்று கொஞ்சி மொழிந்தான்.

சடையன் வழக்கம்போலக் துள்ளிக் குதித்து முன்னால் புறப்பட்டது. கதவண்டை சென்றதும் பின்னால் ராஜாமணி வாராமையால் நின்று அவனை வரும்படி கூப்பிடுவதுபோல் பார்த்தது.

ராஜாமணி கட்டிலே விட்டு எழுத்திருக்கவே இல்லை. வேறு பேச்சுப் பேசவும் இல்லை. என்னைக் தவிக்க வைத்துவிட்டுத் துாரப் பிரயாணம் போய்விட்டான்.

இடுகாட்டில் அவனைக் குழிக்குள் வைக்கும் வரையில் சடையன் பக்கத்திலேயே இருந்தது. எல்லோரும் திரும்புகின்றபோது கூட அதற்கு அந்த இடத்தை விட்டு வர இஷ்டமில்லை. நான்தான் அதை வலியப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன்.

இச்சம்பவங்களெல்லாம் சலனப் படக் காட்சி போன்று என் முன்பு தோன்றி மறைந்தன.

ராஜாமணி பிரிந்தது முதல் மறுபடியும் சடையன் எங்கள் வீட்டிலேயே இருந்தது. இப்பொழுது திடீரென்று அதைக் காணவில்லை யென்பதால் எனக்குப் பழைய வருத்தம் தோன்றலாயிற்று. எண்ணமிட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

சட்டென்று ஒரு புது யோசனை என் மனத்தில் ஒடிற்று. ராஜாமணியைப் புதைத்த இடுகாட்டிற்குச் சடையன் ஒரு சமயம் போயிருக்குமா? ஒரு சமயம் அவனை நினைத்துக்கொண்டு சென்றிருக்கலாமல்லவா? இவ்வெண்ணத்திற்கு ஒருவிதமான ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐந்து வருஷங்களுக்கு முன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/101&oldid=1138259" இலிருந்து மீள்விக்கப்பட்டது