பக்கம்:உரிமைப் பெண்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

113

 விசனத்தோடு ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்கலானர்.

‘என் அன்புள்ள தங்தையே,

நான் தங்கள் கட்டளையைத் தட்டக் கூடாதென்று கல்யாணத்திற்கு இசைந்தேன். இசையுமுன் என் காதலிக்கு விஷயமெல்லாம் எழுதினேன். அவ்ள் நிலைமையை உணர்ந்து எனக்கு அநுமதி தந்துவிட்டதாகத் தான் பதில் எழுதினாள். நான் அவளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதில்லை யென்றும் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் கல்யாணம் செய்துகொண்டு வந்த என்னைக் காண, அவளுடைய துக்கம் கரை கடத்துவிட்டது. இனி உலகில் தனக்கு வேலை யில்லையென்று போய்விட்டாள். அவளுடைய சாவிற்கு நானே பொறுப்பாளி.அவளைத் தேடிக்கொண்டு போய் அவளிடம் மன்னிப்புப் பெறுவதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் விரும்பியபடி கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு விஷயத்தில்கூடத் தங்கள் பேச்சைத் தட்டவில்லை என்ற பேரும் சம்பாதித்துக் கொண்டேன்.

தந்தையே, நான் இனி என் காதலி சென்ற வழியே செல்லுகிறேன். முன்பின் அறியாத ஒர் இளம் பெண்ணை விதவையாக்கிவிட்டுப் போகிறேனே என்ற எண்ணம் என் உள்ளத்தைப் பாதிக்கின்றது; அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் தாங்களும் உள்ளம் குலைவீர்களே என்றும் ஏங்குகிறேன். இருந்தாலும் நான் என் காதலிக்குச் செய்த குற்றம் மிகப் பெரியது. மற்றொருத்தியோடு வாழ்க்கை நடத்தி அக்குற்றத்தை இன்னும் பெரிதாக்க நான் ஒருப்பட மாட்டேன். தந்தையே, எனது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் போய்வருகிறேன். வணக்கம்.

தங்கள் அன்புள்ள மைந்தன்,
ரங்கசாமி.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/118&oldid=1138390" இலிருந்து மீள்விக்கப்பட்டது