பக்கம்:உரிமைப் பெண்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

உரிமைப் பெண்

 “ஏன் தம்பி, கதை இன்னதென்றே எங்களுக்குச் சொல்லாமல், இது தெரியவில்லையா, அது தெரியவில்லையா என்ற கேள்வி போடுகிறாயே; நியாயமா?” என்றார் குள்ளையர்.

வேலுச்சாமி, நீ கதையைப் படித்துக்காட்டிவிடு. பிறகு நாங்களே தனித்தனியாக அதைப்பற்றி யோசித்து முடிவு செய்துகொள்ளுகிறோம். நீங்கள் இரண்டுபேரும் வீணாக ஏன் இப்படி அடிக்கடி சத்தம் போட்டுக்கொள்ளுகிறீர்கள்?” என்று மூக்குக் கண்ணாடிக்காரர் மத்தியஸ்தம் செய்ய வந்தார்.

அவர் ஆலோசனையை அனைவரும் ஆமோதிக்கவே வேலுச்சாமி கதையைப் படிக்கலானான்.

ஏர் முன்னால் செல்லுகிறது; அவன் கால்களும் முன்னால் எட்டி வைக்கின்றன. ஆனால் அவன் உள்ளம் மட்டும் பின்னால் தாவிக்கொண்டிருக்கிறது. அடிக்கடி அவன் திரும்பிப் புன்முறுவலோடு, உள்ளத்தில் பொங்கி வழியும் காதல் கண்களின் வழியாகப் பாய்ந்தோட அவளைப் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். இளஞ் சிரிப்பில் இதழ் மலர நெற்றி ஒளிவீசக் குனிந்துகொள்கிறாள். கைமட்டும் யந்திரம்போல விதைக் கடலையைப் படைக்காலில் ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டு வருகிறது.

காலை பத்து மணி, நல்ல ஏறு வெயில். இருந்தாலும் மழையீரம் போகுமுன்பே விதைத்தாக வேண்டும். இரண்டு ஏர் பூட்டியிருந்தால் எளிதாக முடிந்திருக்கும். ஆனால் பண்ணையாள் தலைவலி யென்று முதல் நாள் படுத்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவன் காலையில் வந்து விடுவான் என்று எதிர்பார்த்து வேறு கூலியாளையும் கூப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/123&oldid=1138413" இலிருந்து மீள்விக்கப்பட்டது