பக்கம்:உரிமைப் பெண்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உரிமைப் பெண்


இப்பொழுது அவனுக்கு அந்தச் சமயம் கிடைத்துவிட்டது. ஆனால் அவன் அதிகம் பேசவில்லை. தன்னைக் கவர்ந்த பெண்கொடியின் அழகில் ஈடுபட்டு அவன் உள்ளம் நிறைந்திருந்தது. ஒரே இன்பக் கிளர்ச்சி. வார்த்தைக்கு அங்கு இடமே இருக்கவில்லை.

பாவாத்தாளும் அதை உணர்ந்துகொண்டாள். வாா்த்தை அலங்காரத்தில் அவனுடைய காதலைப்பற்றிக் கேட்க அவள் விரும்பவில்லை. ஆழ்ந்த உணர்ச்சியைப் பூரணமாகக் காட்டச் சொற்களால் முடியாது. சொற்களை விட மெளனம் அந்த உணர்ச்சியைக் குறிப்பாக நன்கு காட்டும். அந்த மெளனப் பேச்சிலே இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டு தங்கள் வேலையைச் செய்தார்கள்.

ஆனால் பாவாத்தாளுடைய உள்ளத்திலே ஒரு பயம் மட்டும் எப்பொழுதும் ஒளிந்திருந்தது. காளியப்பன் பண்ணைக்காரனுடைய மகன். அவன் தங்தைதான் வீரன் காட்டூரில் பெரியதளக்காரர். அப்படியிருக்கக் காளியப்பன் கூலிக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா? அவன் பண்ணிக்கொள்வதாக ஆயிரந் தடவை உறுதி கூறினாலும் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா? பண்ணைக்காரர் மகனுக்கும், பண்ணையில் வேலை செய்யும் கூலிக்காரிக்கும் கல்யாணமா? இது நடக்கக்கூடிய காரியமா ? இதுவரையில் கண்டிராத புதுமையாக இருக்கிறதே ! மேலும், கல்யாணப் பேச்சு வருகிறபோது காளியப்பனை யார் கேட்கப் போகிறார்கள்? பெற்றோர்களும் நெருங்கிய உறவினரும் தங்களுக்குள்ளேயே பேசி முடிவு செய்கிற காவியத்தானே அது?

இம்மாதிரி எண்ணங்கள் அடிக்கடி அவள் மனதைக் கவ்விக்கொள்ளும். ஆனால் இப்பொழுது அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/125&oldid=1138427" இலிருந்து மீள்விக்கப்பட்டது