பக்கம்:உரிமைப் பெண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உரிமைப் பெண்

 “அதென்னமோ, அவனே அடிக்க வேணும்னே இருந்தது எனக்கு.”

“அவன் கண்டியிலிருந்து இன்னேக்குத்தானே வந்தான் ?”

“அது மெய்தான். இருந்தாலும் அவனைப் பார்க்ததும் ஒரே கோபம் வந்துவிட்டது. ஒரே அடியில் அடிச் செறியலாம்னு மனசு கொதித்தது.”

“ஏன் அப்படி ?”

“அதென்னமோ எனக்கே தெரியவில்லை.”

“சின்ன வயசில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்பீர்களே?”

“ஆமாம், நாங்க ரெண்டு பேருந்தான் சேர்ந்து மாடு மேய்ப்போம். அப்போ அவன் என்னைவிடப் பெரிய பையனாக யிருந்தான். சும்மா என்னை அடிப்பான். தினமும் வேணும்னே அடிக்கிறது, கேலி பண்ணறது, ஏமாத்தறது. இதுதான் அவனுக்கு வேலை.”

“சரி சரி, அதுக்குத்தான் இப்போ வட்டியும் முதலுமாகக் கொடுத்தியா? ஆளையே கொன்றிருப்பாயே விட்டிருந்தா?”

“அப்பா அந்தக் காலத்திலே நான் அவனிடத்திலே பட்ட வேதனை சொல்லவே முடியாது. அன்னைக்கு அவனைத் திருப்பி அடிக்க எனக்குப் பலமில்லை. பேசாமல் எல்லாக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டேன். என் மனசுக்கு அடியிலே மாத்திரம் குமுறிக்கொண்டிருந்தது.”

“அந்த வருத்தத்தையெல்லாம் இதுவரையிலும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தாயா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/13&oldid=1136738" இலிருந்து மீள்விக்கப்பட்டது