பக்கம்:உரிமைப் பெண்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள் நெருப்பு

9

 “இல்லை இல்லை. அதெல்லாம் எப்பவோ மறந்து போச்சு. இருந்தாலும் இன்னைக்கு அவனைப் பார்த்ததும் என்னை அறியாமலே திடீர்னு கோபம் அப்படி வந்து விட்டது.”

“இனிமேல் அவனேக் கண்டா மறுபடியும் அடிச்சுடாதே. பாவம், மெலிஞ்சு வந்து சேர்ந்திருக்கிறான்!”

“சே, இனிமேல் என்னத்துக்கு அடிக்கிறேன்? என்னமோ ஒரு தடவை ஏமாந்து போச்சு. இனிமேல் அவனைத் தொடமாட்டேன்.”

சொங்கப்பன் இவ்வாறு கூறியபோதிலும் இப்பொழுது அவனிடம் மக்கள் முன்போல அவ்வளவு தாராளமாகக் கேலி, தமாஷ் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. உள்ளுக்குள்ளே பயம். திடீரென்று எரிமலை போல் கிளம்பி விட்டால் என்ன செய்வதென்று சந்தேகம், ஆனால் அந்த எரிமலை பொன்னப்பன் மேல் சீறிப் பொங்கியதற்குப் பின் நிரந்தாமாக அணைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/14&oldid=1136739" இலிருந்து மீள்விக்கப்பட்டது