பக்கம்:உரிமைப் பெண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உரிமைப் பெண்


ஊருக்குப் போய் உன் வீட்டைக் கவனித்துக் கொள்; உன் குழந்கைகளையும் நன்றாகப் பார்த்து வளர்த்துவா” என்று அன்போடு சொல்லி அனுப்பிவிட்டான்.

அன்று முதல் வீரப்பன் தானகவே சமைப்பான்; குழந்தைக்குச் சோறு போடுவான். அவளுக்குக் தண்ணீர் ஊற்றுவான். இப்படியாக வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நேரம் தவறாமல் கூலி வேலைக்குப் போவான்; வள்ளியாத்தாளேயும் கூடவே கூட்டிச் செல்லுவான். அவன் கழனிகளிலே வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் மர நிழலிலே கல்லையும் ஒட்டையும் பொறுக்கி எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

இப்படி வளர்ந்து பன்னிரண்டு வயதாவதற்குள் அவள் சிறிது சிறிதாகச் சமையல் செய்வதற்குக் கற்றுக்கொண்டாள். தளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தந்தைக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது. வீரப்பன் தினமும் கூலி வேலைக்குப் போய் வருவான். வந்ததும் தன் மகளோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவள் சமைத்து வைத்திருக்கும் சோளச்சோற்றையோ, ராகிக் களியையோ உண்பான். அவன் உண்ட பிறகு தானும் உண்டு, அடுத்த நாட்காலையில் வேண்டியிருக்கும் உணவைப் பத்திரமாக மூடிவைத்துவிட்டு வள்ளியாத்தாள் படுக்கச் செல்லுவாள். தந்தையும் மகளும் பேசிக்கொண்டே உறங்கி விடுவார்கள்.

வீரப்பன் சம்பாதிக்கும் கூலியைக்கொண்டு இவ்வாறு வாழ்க்கை எளிமை மணக்கும் இன்பமாக கடந்து வந்தது. ஆனால் மகளுக்கு வயசாக ஆக வீரப்பன் மனத்திலே ஒரு கவலை குடிபுகலாயிற்று. ஆண்டு முழுவதும் வேலை செய்தாலும் அவனால் இருபது ரூபாய் கூட மிச்சம் பிடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/17&oldid=1136753" இலிருந்து மீள்விக்கப்பட்டது