பக்கம்:உரிமைப் பெண்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உரிமைப் பெண்

 அருந்தாமல் இருப்பதையும் பார்த்தாவது அவன் உண்மையை அறிந்துகொள்ளமாட்டானா என்று எண்ணியிருந்தாள். அந்த நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி வீரப்பன் அன்றிரவு திரும்பவில்லை. மறு நாளும் அவன் வரக் காணோம். அதற்கடுத்த நாள் பொழுது சாயும் வரையில் வரவில்லை.

கடாரியை விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராகத் தன் தங்கை வீட்டிற்குப் போயிருக்கலாம் என்று அவள் கருதினாள். தங்கையோடு கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியெல்லாம் உற்சாகமாகப் பேச்சு நடந்துகொண்டிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் அவள் துக்கத்தை மேலும் அதிகமாக்கிற்று.

வள்ளியாத்தாளுக்குச் சென்ற ஆறுமாதங்களாக ஒரு தோழி கிடைத்திருந்தாள். அவள்தான் எதிர் வீட்டுச் சின்னப்பனுக்கு மனைவியாக வாய்த்த பாவாத்தாள். இருவரும் விரைவிலே நெருங்கிப் பழகி ஒருத்திமேலொருத்தி மிகுந்த அன்பு கொள்ளலானார்கள். வள்ளியாத்தாள் பாவாத்தாளை அக்காள் என்று அழைத்தாள். பாவாத்தாள் வீரப்பனைப் பெரியப்பன் என்று முறை கொண்டாடினாள். இளம் பெண்கள் இருவரும் தங்கள் உள்ளத் துடிப்பை யெல்லாம் தங்களுக்குள்ளே ஒளிக்காமல் பேசிக்கொள்வார்கள். பாவாத்தாளுடைய சொந்த ஊர் அங்கிருந்து பதினேந்து மைல் இருக்கும். அங்கேயே ஒர் இளைஞனுக்கு அவளை மணம் முடிப்பதாக நெடுநாள் வரையில் பேச்சிருந்ததாம். அவளுக்கும் அது உள்ளுற விருப்பமாம். ஆனால் சீர்வரிசைகளைப் பற்றி கடந்த பேச்சில் பெற்றோர்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/23&oldid=1137079" இலிருந்து மீள்விக்கப்பட்டது