பக்கம்:உரிமைப் பெண்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

19

 குள்ளே உடன்பாடேற்படாததால் கடைசியில் அந்தக் கல்யாணம் நின்றுபோய் விட்டதாம். பிறகு பாவாத்தாள் காட்டூரில் என்றும் பார்த்திராத ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். இப்பொழுது அவளுடைய உள்ளத்தைத் திறந்து காண்பிப்பதற்கு வள்ளியாத்தாள் ஒருத்திதான் உண்டு.

கிராமங்களிலே புதிதாக மணமான இளம் பெண்கள் தனியாக உட்கார்ந்துகொண்டு கண்ணீர் வடிப்பதைச் சாதாரணமாகக் காணலாம். தாய் தங்தையரைப் பிரிந்து புக்ககம் வந்ததால் அப்படிச் செய்கிறார்கள் என்று அனை வரும் சொல்வார்கள். இது பொதுவாக உண்மையாக இருக்கலாம். ஆனால் வேறு காரணமே இருக்காது என்று அவர்கள் தீர்மானமாக நினைப்பதுதான் ஆச்சரியம். அப்படி இருந்தால்தான் என்ன? நாளடைவில் ஒன்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடுகிறது. சமூகக் கட்டுப்பாட்டையெல்லாம் பார்த்துப் பார்த்து உள்ளம் சுருங்கி இளம் பெண்களும் தங்கள் நிலைமையை மெளனமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். பின்பு வாழ்க்கை அவர்களுக்கு இன்பமாகவும் மாறிவிடுகிறது. மறதி என்பது ஒர் அற்புதமான சக்தி யல்லவா?

கிராமச் சமுதாய வாழ்க்கை போதிக்கின்ற இந்தக் கருணையற்ற பாடத்தைத்தான் பாவாத்தாள் இன்று கற்றுக் கொண்டு வருகிறாள். அவளும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் கூர்மை மழுங்கிக் குடும்பச் சகடத்தில் கிரீச்சிடாது செல்லும் சக்கரமாகிவிடுவாள். அதுதானே வேண்டியது?

சென்ற இரண்டு மூன்று நாட்களாகப் பாவாத்தாளுக்கு வேலை அதிகம். பருத்திக்காடு களை வெட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/24&oldid=1137084" இலிருந்து மீள்விக்கப்பட்டது