பக்கம்:உரிமைப் பெண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வளர்த்த கடாரி

21

 “நீ மட்டும் எப்படிச் சொல்லுவாய்? என்னவோ விதியென்று பேசாமல் இருக்க வேண்டியதுதான்” என்று வள்ளியாத்தாள் பற்றற்றவள் போல் பேசினாள்.

இவ்வாறு இருவரும் அங்கலாய்த்துக் கண்களிலிருந்து முத்துத் துளிகளைச் சிந்திக்கொண்டிருந்தார்கள்.

வெகு நேரம் இப்படிக் கழிந்தது. வெளியிலே இன்னும் மங்கலாக வெளிச்சமிருந்தாலும் குடிசைக் குள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது. விளக்கேற்றி வைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தோன்றவில்லை. அந்தச் சமயத்தில் எதிர் வீட்டு வாசலிலிருந்து பாவாத்தாளின் மாமியார் அவளை உரத்த குரலில் கூப்பிடும் இசை கேட்டது. “அக்கா, நீ விட்டுக்குப் போ. அங்கே வேலை இருக்கும்” என்றாள் வள்ளியாத்தாள்.

ஆனால் பாவாத்தாள் அசையவே இல்லை. வெளியிலே காலடிச் சத்தம் கேட்டது. முன்றானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு இருவரும் கலவரத்தோடு திரும்பிப் பார்த்தார்கள். வீரப்பன் மெதுவாக நடந்து வந்து வெளித் திண்ணையிலே, உஸ் அப்பாடா!” என்று அனத்திக்கொண்டு உட்கார்ந்தான். முழங்கால் வரையிலும் படிந்திருந்த புழுதியைக் கழுவவே இல்லை. அவன் முகத்தில் சோர்வும் களேப்புமே குடிகொண்டிருந்தன.

சற்று நோம் யாரும் பேசவில்லை. பிறகு பாவாத்தாள் ஆரம்பித்தாள். “பெரியப்பா, எங்கே போயிருந்தீர்கள்? இந்த மூன்று நாளாய் வள்ளியாத்தா சோறு தண்ணீர் ஒன்றும் குடிக்காமல் அழுதுகொண்டே கிடக்கிறாள்.”

“நானும் நல்ல கஞ்சி குடித்து மூன்று நாளாச்சு” என்று பதில் சொன்னான் விரப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/26&oldid=1137095" இலிருந்து மீள்விக்கப்பட்டது