பக்கம்:உரிமைப் பெண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உரிமைப்பெண்


குறி தவறாமல் சுடக்கூடிய திறமை முதலில் வேண்டும். அது மட்டும் போதாது. சமயோசித புத்தியும் மின்னல் வேகத்திலே தீர்மானம் செய்து பதற்றமில்லாமல் சடாரென்று காரியத்தில் இறங்கும் தன்மையும் வேண்டும். இவை யெல்லாமிருந்தாலும் புலியின் தன்மையைப் பற்றிப் பூரணமாகக் தெரிந்துகொள்ளாவிடில் அதை வேட்டையாடுவது உயிருக்கு ஆபத்தாகத்தான் முடியும்.

ஷோக் மான் வேட்டை என்று கேள்விப்பட்டிருக்கிறீா்களா? வேட்டையாடுகிறவன், துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஷோக்காக ஒரிடக்திலே பதுங்கியிருப்பான். அவன் காட்டிற்குள்ளே அலைவதுமில்லை; மானைக் தேடுவதுமில்லை. கூட வந்திருக்கும் ஏவலாளர்கள் தப்பட்டை, கொம்பு முதலிய வாத்தியங்களை முழக்கிக்கொண்டு காட்டிற்குள்ளே நுழைவார்கள். அந்த ஆரவாரம் கேட்டு மிரண்ட மான்கள் அங்கும் இங்குமாகப் பாய்ந்தோடும். பதுங்கியிருக்கிறவனுக்கு எதிரிலே தென்பட்டால் அவன் சுடுவான். இதுதான் ஷோக் மான் வேட்டை. இப்படி ஒய்யாரமாகப் புலிவேட்டையாடும் ஒரு வகையும் உண்டு. ஒரு மாரத்தின் உச்சியிலே கட்டப்பட்டிருக்கும் ஒளிகூண்டிலே ஒன்றிரண்டு பேர் உட்கார்ந்துகொள்வார்கள். கீழே ஓரிடத்திலே ஒர் ஆட்டையோ அல்லது கிழட்டு மாட்டையோ கட்டிவிடுவார்கள். கானகத்திலே தனியாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பிராணி இருள் ஏற ஏறப் பயந்து ஒலமிடும். அதைக் கேட்டுப் புலி வருவதுண்டு.

கட்டுண்டு கிடக்கும் அந்த ஜீவனைப் புலி அடித்துக் தின்ன ஆரம்பிக்கும்போது மர உச்சியில் இருப்பவர்கள் அதன் முகத்திலே விழும்படி பிரகாசம் மிகுந்த மின்சார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/31&oldid=1137147" இலிருந்து மீள்விக்கப்பட்டது